ECONOMY

GoKL இலவச பேருந்து சேவையைப் பயன்படுத்துபவர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் வெளிநாட்டினர் – துணை அமைச்சர்

கோலாலம்பூர், ஆகஸ்ட் 10 – GoKL இலவச பேருந்து சேவையைப் பயன்படுத்துபவர்களில் 45.2 விழுக்காடு வெளிநாட்டினர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது என்று மத்தியப் பிரதேசங்களின் துணை அமைச்சர் டத்தோஸ்ரீ ஜலாலுடின் அலியாஸ் தெரிவித்தார்.

எனவே, எதிர்காலத்தில் சேவையைப் பயன்படுத்தும் வெளிநாட்டினரிடம் கட்டணம் வசூலிக்க கோலாலம்பூர் மாநகரசபை (டிபிகேஎல்) முன்மொழிவதற்கான வாய்ப்பை அவர் நிராகரிக்கவில்லை.

“இந்தச் சேவையை அவர்கள் இலவசமாகப் பயன்படுத்துகிறார்கள். இந்த வெளிநாட்டினரின் ஒவ்வொரு பயன்பாட்டிற்கும் RM1 மட்டுமே வசூலித்தால், ஒவ்வொரு மாதமும் RM92 லட்சம் வசூலிக்க முடியும்,” என்று ஜலாலுடின் இன்று டேவான் நெகாராவில் ஒரு கேள்வி பதில் அமர்வின் போது கூறினார்.

GoKL இலவச பேருந்து சேவையைப் பயன்படுத்தும் வெளிநாட்டினரின் எண்ணிக்கை மற்றும் எதிர்காலத்தில் அந்தச் சேவையைப் பயன்படுத்துவதற்கு அவர்களிடம் கட்டணம் வசூலிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதா என்பதையும் அறிய விரும்பிய செனட்டர் டத்தோ முகமட் ஹிசாமுடின் யஹாயாவின் துணைக் கேள்விக்கு அவர் பதிலளித்தார்.

தலைநகரில் உள்ளூர் மக்கள் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தாததற்கான காரணம் குறித்த செனட்டர் டத்தோ டோமினிக் லா ஹோ சாயின் துணைக் கேள்விக்கு அவர் அளித்த பதிலில், ஆரம்ப மற்றும் சேரும் இடங்களின் வழித்தடங்களுக்கு இடையேயான இணைப்பு இன்னும் திருப்திகரமாக இல்லாததே முக்கிய காரணங்களில் ஒன்றாகும் என்று ஜலாலுடின் கூறினார்.

கூடுதலாக, பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவதை விட, தங்கள் சொந்த வாகனத்தைப் பயன்படுத்துவதால் தமக்கு குறைத்த நேரமே எடுப்பதாக சாலைப் பயனர்கள் கூறுகின்றனர் என்றார்.


Pengarang :