ECONOMYSELANGOR

உலு சிலாங்கூரில் அனைத்து 188 இடங்களிலும் நீர் விநியோகம் முழுமையாக சீரடைந்தது

ஷா ஆலம், ஆக 11– சுங்கை ராசா நீர் சுத்திகரிப்பு மையத்தில் மேற்கொள்ளப்பட்ட சீரமைப்பு பணிகள் காரணமாக பாதிப்புக்குள்ளான உலு சிலாங்கூர் மாவட்டத்தின் அனைத்து 188 பகுதிகளிலும் நீர் விநியோகம் இன்று விடியற்காலை 3.00 மணியளவில் முழுமையாக சீரடைந்தது.

இந்த நீர் விநியோகத் தடையின் போது பொறுமை காத்த அனைத்து பயனீட்டாளர்களுக்கும் பெங்குருசான் ஆயர் சிலாங்கூர் நிறுவனம் நன்றி தெரிவித்துக் கொண்டது.

அட்டவணையிடப்பட்ட இந்த நீர் விநியோகத் தடை காலத்தில் பொறுமை காத்ததோடு எங்களுக்கு முழு ஒத்துழைப்பும் வழங்கிய அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் என அந்நிறுவனம் தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளது.

சுங்கை ராசா நீர் சுத்திகரிப்பு மையத்தில் மேற்கொள்ளப்படும் சீரமைப்பு மற்றும் பழுதுபார்ப்பு பணிகள் காரணமாக உலு  சிலாங்கூர் மாவட்டத்தின் 188 இடங்களில் கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கி மூன்று நாட்களுக்கு நீர் விநியோகத் தடை ஏற்படும் என்று ஆயர் சிலாங்கூர் நிறுவனம் இதற்கு முன்னர் கூறியிருந்த து.

பயனீட்டாளர்களின் எதிர்கால நன்மை கருதி மேற்கொள்ளப்படும் இந்த சீரமைப்பு பணிக்கு தேசிய நீர் ஆணையத்தின் ஒப்புதல் கிடைக்கப் பெற்றுள்ளதாக ஆயர் சிலாங்கூர் நிறுவனத்தின் வர்த்தக தொடர்புப் பிரிவுத் தலைவர் எதா பசேரி தெரிவித்திருந்தார்.


Pengarang :