ECONOMYNATIONAL

9,000 கடப்பிதழ்கள்; சம்பந்தப்பட்டவர்கள் இன்னும் பெற்று கொள்ளவில்லை

புத்ராஜெயா, ஆகஸ்ட் 12: ஆன்லைனில் விண்ணப்பித்து புதுப்பிக்கப்பட்ட 9,000க்கும் மேற்பட்ட மலேசிய அனைத்துலக  கடப்பிதழ்கள் இன்னும் சம்பந்தப்பட்டவர்கள் பெற்று கொள்ளவில்லை என்று குடிநுழைவு தலைமை இயக்குநர் டத்தோஸ்ரீ கைருல் டிசைமி டாட் கூறினார்.

அதன்படி, கடப்பிதழ்கள் ரத்து செய்யப்படுவதை தவிர்க்க, நாடு முழுவதும் உள்ள கடப்பிதழ்கள் வழங்கும் அலுவலகங்களில் பி.எம்.ஏ-க்கு விண்ணப்பித்த பொதுமக்கள் உடனடியாக அதை பெற்றுக் கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

முன்னதாக, உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடின், ஆன்லைனில் தங்கள் கடப்பிதழ்களை புதுப்பித்துள்ள மலேசியர்கள், 90 நாட்களுக்கு பின் அழிக்கப் படுவதைத் தவிர்க்க, ஆவணங்களை உடனடியாகக் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.

பி.எம்.ஏ. விண்ணப்பங்கள் இரவு அமர்வில் குறைந்து வரும் புள்ளிவிவரப் போக்கைத் தொடர்ந்து தீபகற்ப மலேசியாவில் உள்ள அனைத்து பி.எம்.ஏ. வழங்கும் அலுவலகங்கள் மற்றும் நகர்ப்புற உருமாற்ற மையங்களுக்கான (UTC) புதிய செயல்பாட்டு நேரம் ஆகஸ்ட் 15 முதல் நடைமுறைக்கு வரும் என்றும் அதே அறிக்கையில் கைருல் டிசைமி தெரிவித்தார்.

பெர்லிஸ், பகாங், திரங்கானு மற்றும் கெடா தவிர, அனைத்து மாநிலங்கள் மற்றும் கிளைகளில் உள்ள பிஎம்ஏ அலுவலகங்கள் வார நாட்களில் காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்படும். வார இறுதியில் அவை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும்.

இதற்கிடையில், பெர்லிஸ், பகாங், திரங்கானு மற்றும் கெடா தவிர அனைத்து மாநிலங்களிலும் கிளைகளிலும் பிஎம்ஏ அலுவலகங்கள் சனிக்கிழமைகளில் காலை 8 மணி முதல் மதியம் 12.30 மணி வரை செயல்படும்.

UTC அலுவலகங்கள் வார நாட்களில் காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்படும், பெர்லிஸ், பகாங், திரங்கானு மற்றும் கெடா தவிர, காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும்.

பெர்லிஸ், பகாங், திரங்கானு மற்றும் கெடா உள்ளிட்ட அனைத்து UTC அலுவலகங்களும்  வார இறுதி நாட்களில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும்.

முன்னதாக, ஆறு பாஸ்போர்ட் வழங்கும் அலுவலகங்கள் மற்றும் குடிநுழைவு திணைக்கள  கவுண்டர்களில் செயல்படும் நேரம் இரவு 10 மணி வரை நீட்டிக்கப்பட்டது, மற்ற ஆறு அலுவலகங்கள் மே 11 முதல் மாலை 6 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

புத்ராஜெயா, கோலாலம்பூர், சிலாங்கூர், ஜோகூர், நெகிரி செம்பிலான் மற்றும் மலாக்கா ஆகிய ஆறு வளாகங்களின் செயல்பாட்டு நேரம் இரவு 10 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது, பினாங்கு, கெடா, பேராக், கிளந்தான், திரங்கானு மற்றும் பெர்லிஸ் ஆகியவை மாலை 6 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


Pengarang :