ECONOMYHEALTHSELANGOR

இருதய நோயை முன்கூட்டியே கண்டறிய இலவச மருத்துவ பரிசோதனை உதவும்- சித்தி மரியா

ஷா ஆலம், ஆக 12– இருதய நோயை முன்கூட்டியே கண்டறிவதற்கு சிலாங்கூர் அரசின் இலவச மருத்துவ பரிசோதனை இயக்கம் பெரிதும் உதவும்.

நாட்டில் அதிக உயிரிழப்புகளுக்கு காரணமாக இருக்கும் இருதய நோய்க்கான அறிகுறிகளை இந்த பரிசோதனை இயக்கத்தின் மூலம் பொது மக்கள் முன்கூட்டியே தெரிந்து கொள்ள முடியும் என்று பொது சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கூறினார்.

உலகில் ஆண்டொன்றுக்கு 1 கோடியே 70 லட்சம் பேர் வரை இருதய நோயினால் மரணமடைகின்றனர் என்று அவர் சொன்னார்.

சிலாங்கூர் அரசின் ஏற்பாட்டிலான இந்த இலவச மருத்துவ பரிசோதனை இயக்கம் இம்மாதம் 13 மற்றும் 14 ஆம் தேதிகளில் மூன்று சட்டமன்ற தொகுதிகளில் நடைபெறவுள்ளது.

கோத்தா டாமன்சாரா தொகுதி நிலையிலான மருத்துவ பரிசோதனை இயக்கம் வரும் 13 ஆம் தேதி சனிக்கிழமை செக்சன் யு6, டேவான் ரோஸால் எம்.பி.எஸ்.ஏ.வில் நடைபெறும்.

கோத்தா அங்கிரிக் தொகுதிக்கான மருத்துவ பரிசோதனை இயக்கம் டேவான் ராஃக்லிஷியா எம்.பி.எஸ்.ஏ. மண்டபத்திலும் ரவாங் தொகுதி நிலையிலான பரிசோதனை ரவாங், பத்து 17, தெராத்தாய் மண்டபத்திலும் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

உடலாரோக்கியத்தைப் பாதுகாப்பதன் அவசியத்தையும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதன் முக்கியத்துவத்தையும் பொது மக்களுக்கு உணர்த்தும் நோக்கில் இந்த பரிசோதனை இயக்கம் மேற்கொள்ளப்படுவதாக  டாக்டர் சித்தி மரியா மாமுட் தெரிவித்தார்.

மாநிலம் முழுவதும் இந்த இலவச மருத்துவ பரிசோதனைத் இயக்கத்தை நடத்துவதற்கு மாநில அரசு 34 லட்சம் வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது. இதன் மூலம் 39 ஆயிரம் பேர் வரை பயனடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது.


Pengarang :