ECONOMYPENDIDIKANSELANGOR

எஸ்.பி.எம். தேர்வில் சிறப்பாக தேறிய மாணவர்களுக்கு பாத்தாங் காலி தொகுதி சார்பில் வெகுமதி

ஷா ஆலம், ஆக 16- கடந்த 2021 ஆம் ஆண்டு எஸ்.பி.எம்.தேர்வில் சிறப்பான அடைவு நிலையைப் பதிவு செய்த 100 மாணவர்களுக்கு பாத்தாங் காலி தொகுதி சார்பில் ரொக்கத் தொகை பரிசாக வழங்கப்பட்டது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்வில் அம்மாணவர்கள் 100 வெள்ளி முதல் 300 வெள்ளி வரை வெகுமதி பெற்றதாக பாத்தாங் காலி தொகுதி மக்கள் சேவை மைய ஒருங்கிணைப்பாளர் சைபுடின் ஷாபி முகமது கூறினார்.

கடந்தாண்டு எஸ்.பி.எம். தேர்வில் 5ஏ, 6ஏ, 7ஏ, 8ஏ மற்றும் 9ஏ பெற்ற மாணவர்கள் வெ. 100 முதல் வெ.300 வரை பரிசாகப் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் எங்களின் வாழ்த்துகள் என்று அவர் தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

சிலாங்கூர் இளைஞர் இயக்கம், தீபகற்ப மலேசிய மலாய் மாணவர்கள் கூட்டமைப்பின் உலு சிலாங்கூர் கிளை, டீம் சிலாங்கூர் டி.ஒய்.எம்.பி.ஏ. எடுக்கேஷன் ஆகிய தரப்பினரின் ஒத்துழைப்புடன் இந்த நிகழ்வு நடத்தப்பட்டதாக அவர் சொன்னார்.

பாத்தாங் காலி டேவான் ஓராங் ராமாய் மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சிலாங்கூர் அரசின் இல்திஸாம் சிலாங்கூர் பென்யாயாங் திட்டம் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.


Pengarang :