ECONOMYSELANGOR

ஒற்றுமை மற்றும் ஒருங்கிணைப்பு மன்றம் அக்டோபரில் ஆட்சிக்குழுவில் தாக்கல்- சித்தி மரியா தகவல்

ஷா ஆலம், ஆக 16- சிலாங்கூர் மாநில ஒற்றுமை மற்றும் ஒருங்கிணைப்பு மன்றம் (எம்.பி.ஐ.எஸ்.) வரும் அக்டோபர் மாத இறுதியில் மாநில ஆட்சிக்குழுவில் தாக்கல் செய்யப்படும்.

மாநிலத்தில் ஒற்றுமை தொடர்பான கொள்கைகளில் ஆலோசனை மற்றும் சிந்தனை அமைப்பாக செயல்படக்கூடிய இம்மன்றத்தின் உருவாக்கப் பரிந்துரை ஆட்சிக்குழுவில் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னர் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது என்று ஒற்றுமைத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கூறினார்.

புதிதாக உருவாக்கப்படும் துறையாக இது விளங்குவதால் ஒற்றுமை தொடர்பான முன்னெடுப்புகளை திட்டமிடுவதற்கும் அமல்படுத்துவதற்கும் எதுவாக தனக்கான பிரத்தியேக இலக்குகளையும் கொள்கைகளையும் இந்த மன்றம் கொண்டிருப்பது அவசியம் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த மன்றத்திற்கான கொள்கைகளை வகுப்பது தொடர்பில் சட்டமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடல் நடத்தினோம். பல்வேறு அம்சங்களில் ஆக்க கரமான கருத்துகள் இந்த கலந்துரையாடலின் போது பெறப்பட்டன என்றார் அவர்.

நடுநிலையான மாநில நிர்வாக முறையை மேம்படுத்துவதன் வாயிலாக ஒற்றுமையை வளர்ப்பது அடிப்படை செயல்வடிவத்தில் இடம் பெற்றுள்ள அம்சங்களில் முக்கியமானதாகும் என்று அவர் சொன்னார்.

அனைவரின் வளப்பம் மற்றும் மேம்பாட்டை உறுதி செய்வதற்காக எந்த தரப்பினரும் புறக்கணிக்கப்படாமலிருப்பதை உறுதி செய்வது, பன்முகத் தன்மையை கொண்டாடுவது, செழுமையான இனத் தோற்றத்தை தோற்றதை உருவாக்குவது இதன் முக்கிய அம்சங்களாகும் என அவர் தெரிவித்தார்.


Pengarang :