ECONOMYMEDIA STATEMENTNATIONAL

தேசிய தின அணிவகுப்பின் போது தலைநகரைச் சுற்றியுள்ள 18 சாலைகள் மூடப்படும்

கோலாலம்பூர், ஆகஸ்ட் 23:  ஆகஸ்ட் 31 ஆம் தேதி தேசிய தின விழா நிகழ்ச்சிக்காக தலைநகரைச் சுற்றியுள்ள 18 சாலைகள் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை மூடப்படும்.

சம்பந்தப்பட்ட சாலைகளில் ஜாலான் டிராவர்ஸ், ஜாலான் டமன்சாரா, ஜாலான் டமன்சாரா (பங்சார் நோக்கி செல்லும் பாதை) புலாத்தான் ஹிஷாமுடின், ஜாலான் கினாபாலு (செலாயாங் நோக்கி), ஜாலான் கினாபாலு (சிராஸ் நோக்கி) ஜாலான் கினாபாலு (புலாத்தான் டத்தோ ஓன்), ஜாலான் கூச்சிங், புலாத்தான் டத்தோ ஓன் (நாடாளுமன்ற சாலையிலிருந்து), புலாத்தான் டத்தோ ஓன் (சுல்தான் சலாவுடின் சாலையிலிருந்து), ஜாலான் துன் எச் எஸ் லீ, ஜாலான் கெர்ஜா, ஜாலான் ஹேங் கஸ்தூரி, ஜாலான் துங்கு அப்துல் ரஹ்மான், ஜாலான் ராஜா லாவுட், ஜாலான் முன்ஷி அப்துல்லா, ஜாலான் டாங் வாங்கி மற்றும் ஜாலான்  பூனோஸ் 6 ஆகும் என்று கோலாலம்பூர் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறையின் தலைவர் ஏசிபி சரிபுடின் முகமது சலே கூறினார்.

ஆகஸ்ட் 26 அன்று,  அணிவகுப்பு ஒத்திகைக்கு  ஜாலான் சுல்தான் ஹிஷாமுடின் மற்றும் ஜாலான் ராஜா மூடப்படும் என்று அவர் கூறினார்.

“ஆகஸ்ட் 27 முதல் 29 வரை முழு அணிவகுப்பு நடத்தப்பட்டு, ஜாலான் ராஜா (மெர்டேக்கா சதுக்கம்), ஜாலான் டிராவர்ஸ் டதாரான் மெர்டேகா, ஜாலான் டமன்சாரா ஆகிய இடங்களுக்குச் செல்லும் வழிகள், சிரம்பான் நெடுஞ்சாலையில் இருந்து ஜாலான் டிராவர்ஸ் மற்றும் நாடாளுமன்றத்தின் திசையிலிருந்து பங்சார் நோக்கிய ஜாலான் டமன்சாரா மூடப்படும்,” பெர்னாமா வானொலிக்கு இன்று பேட்டியளித்த போது அவர் கூறினார்.

மேலும், புலாத்தான் ஹிஷாமுடினில் உள்ள சாலை, செலாயாங் மற்றும் சிராஸ் திசையில் உள்ள ஜாலான் கினாபாலு ஆகிய பகுதிகள் முழு அணிவகுப்பின் போது மூடப்படும்.

ஆகஸ்ட் 30 ஆம் தேதி சாலைகள் மூடப்படாது.

நெரிசலைத் தவிர்ப்பதற்காக, ஆகஸ்ட் 31 ஆம் தேதி அதிகாலை 4 மணி முதல் டதாரான் மெர்டேக்காவுக்குச் செல்லத் தொடங்கும் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துமாறும் சரிபுடின் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.

கொண்டாட்டங்கள் முடிந்ததும் அனைத்து சாலைகளும் கட்டம் கட்டமாக திறக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

175 அதிகாரிகளும் காவல்துறையினரும் அந்த நாளில் தலைநகரைச் சுற்றியுள்ள ஒவ்வொரு சாலை மூடும் சந்திப்புகளையும் கண்காணித்து கட்டுப்படுத்துவதாகக் கூறினார், கொண்டாட்டத்தில் சுமார் 50,000 பேர் கலந்துகொள்வார்கள் என்று அவர் மதிப்பிட்டார்.


Pengarang :