ECONOMYSELANGOR

பண்டமாரானில் வசிக்கும் 84 பேர் மாதாந்திர உதவியாக RM300 பெற்றனர்

ஷா ஆலம், 24 ஆகஸ்ட்: பண்டமாரான் சட்டமன்றத்தில் இதுவரை சிலாங்கூர் நல்வாழ்வு உதவித் திட்டத்திற்கு (பிங்காஸ்) மொத்தம் 333 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

அத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் லியோங் டக் சீ கூறுகையில், 84 குடியிருப்பாளர்கள் மட்டும் ஆண்டுக்கு RM3,600 தொகையைப் பெற தகுதியுடையவர்கள்.

பல்வேறு காரணங்களால் மொத்தம் 171 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. அவர்களில் பி40 அல்லாத மற்றும் பண்டமாரான் வாக்காளர்கள் அல்லாதவர்களும் உண்டுண்டு.

“வழங்கப்பட்ட ஆவணங்கள் முழுமையடையாத தால் மீதமுள்ள விண்ணப்பம் இன்னும் பரிசீலனையில் உள்ளது” என்று அவர் சிலாங்கூர்கினியிடம் கூறினார்.

RM10.8 கோடி ஒதுக்கீட்டில் 30,000 குடும்பங்கள் பயனடையும் கிஸ் எனப்படும் சிலாங்கூர் பரிவு மிக்க அன்னையர் திட்டம் மற்றும் கிஸ் ஐ.டி. எனப்படும் தனித்து வாழும் தாய்மார்களுக்கான திட்டத்திற்கு மாற்றாக இந்த பிங்காஸ் திட்டம் கடந்த ஜூன் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இல்திஸாம் சிலாங்கூர் பென்யாயாங்கின் 44 ஊக்கத்தொகைகளின் ஒரு பகுதியாக இருக்கும் இந்த திட்டம், பெறுனர்கள் மாதத்திற்கு RM300 அல்லது வருடத்திற்கு RM3,600 மாதாந்திர உதவியைப் பெறுவார்கள்.


Pengarang :