ECONOMYNATIONAL

குறைந்த பட்ச சம்பளம்- அரசாங்கம்-கியூபெக்ஸ் இடையே நாளை இறுதிச் சுற்றுப் பேச்சு

பெசுட், ஆக 25- பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் வரும் ஆகஸ்டு 30 ஆம் தேதி அறிவிக்கவுள்ள ஒரு விவகாரம் தொடர்பில் கியூபெக்ஸ் எனப்படும் அரசு பணியாளர்கள் தொழிற்சங்கமும் அரசாங்கமும் நாளை இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளன.

நாட்டிலுள்ள கிரேட் 54க்கு கீழூள்ள சுமார் 14 லட்சம் அரசு ஊழியர்களுக்கு இந்த பேச்சுவார்த்தை மன நிம்மதியை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக கியூபெக்ஸ் தலைவர் டத்தோ அட்னான் மாட் கூறினார்.

பிரதமர் வெளியிடவுள்ள அந்த அறிவிப்பு இன்னும் இறுதி செய்யப்படாத நிலையில் அரசு ஊழியர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி தொடர்பில் அரசு உயர் அதிகாரிகளுடன் நாங்கள் நாளை பேச்சு நடத்தவுள்ளோம் என அவர் குறிப்பிட்டார்.

வரும் ஆகஸ்டு 30ஆம் தேதி அரசு ஊழியர்கள் முன் நிகழ்த்தவுள்ள முக்கிய உரையில் பொதுச் சேவை ஊழியர்களுக்கு மகிழ்ச்சியளிக்கக்கூடிய அறிவிப்பு வெளியிடப்படும் என்று பிரதமர் இஸ்மாயில் கடந்த 21 ஆம் தேதி கூறியிருந்தார்.

வாழ்க்கைச் செலவின அதிகரிப்பு மற்றும் நடப்பு பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டு குறைந்த பட்சம் சம்பள விகிதம் மற்றும் கூடுதல் அலவன்ஸ் ஆகிய அம்சங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று அட்னான் கூறினார்.


Pengarang :