ECONOMYSELANGOR

ஹிஜ்ரா அறவாரியத்தின் ‘ஜீரோ டு ஹீரோ‘ திட்டத்தின் வழி தொழில் முனைவோருக்கு பயிற்சி

ஷா ஆலம், ஆக 25– புதிதாக தொழில் தொடங்க ஆர்வமுள்ளவர்கள் யாயாசான் ஹிஜ்ரா அறவாரியத்தின் (ஹிஜ்ரா) ‘ஜீரோ டு ஹீரோ‘ திட்டத்தில் பங்கேற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

கடனுதவி காலத்தில் வழிகாட்டும் நிறுவனத்தின் மூலம் தொடர்ச்சியான பயிற்சிகள், சந்தைப்படுத்தும் முறை மற்றும் வழிகாட்டுதல் வழங்கப்படுவதாக அந்த அறவாரியம் கூறியது.

ஆர்வமுள்ள தொழில்முனைவோர் மாநிலம் முழுவதும் உள்ள 20 ஹிஜ்ரா கிளைகளைத் தொடர்பு கொள்ளலாம் அல்லது http://www.hjrahselanor.com/?page_id=32  என்ற அகப்பக்கத்தை நாடலாம் என அது  தெரிவித்தது.

ஜீரோ டு ஹீரோ திட்டம் தவிர்த்து ஐ-பிஸ்னஸ், நியாகா டாருள் ஏசான் (நாடி), கோ டிஜிட்டல், ஐ-லெஸ்தாரி, ஐ-அக்ரோ மற்றும் ஐ-பெர்மூசிம் வர்த்தக கடனுதவித் திட்டங்களையும் ஹிஜ்ரா வழங்குகிறது.

ஹிஜ்ரா வர்த்தக கடனுதவித்  திட்டத்தில் சில மேம்பாடுகள் செய்யப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கடந்தாண்டு நவம்பர் 26 ஆம் தேதி 2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்த போது கூறியிருந்தார்.

தொழில் முனைவோருக்கு கடனுதவி வழங்க 12 கோடி வெள்ளியில் நிதி, வர்த்தக விரிவாக்கத்திற்கு 100,000 வெள்ளி கடன் பெற வகை செய்யும் புதிய திட்டம் ஆகியவையும் அதில் அடங்கும் என்று அவர் குறிப்பிட்டார்.


Pengarang :