ECONOMYNATIONAL

நஜிப்பிற்கு பொது மன்னிப்பு கோரி இஸ்தானா நெகாரா முன் பேரணி- போலீஸ் விசாரணை

கோலாலம்பூர், ஆக 26- இஸ்தானா நெகாரா முன் மலேசிய தேசிய ஒற்றுமை ஒருங்கிணைப்பு அமைப்பு நேற்று நடத்தி பேரணி தொடர்பில் போலீசார் விசாரணை அறிக்கையைத் திறந்துள்ளனர்.

இந்த பேரணிக்கு ஏற்பாடு செய்த ஏற்பாட்டாளர்கள் விரைந்து முன்வந்து போலீசாரிடம் வாக்குமூலம் அளிக்கும்படி பிரிக்பீல்ட்ஸ் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அமிஹிஷாம் அப்துல் சுக்கோர் வலியுறுத்தினார்.

கருப்பு உடையணிந்த சுமார் 300 பேர் கலந்து கொண்ட இந்த பேரணி தொடர்பில் எந்த விண்ணப்பமும் போலீசாரிடம் சமர்ப்பிக்கப்படவில்லை என்று அவர் அறிக்கை ஒன்றில் கூறினார்.

இந்த பேரணி தொடர்பில் தகவலறிந்தவர்கள் கோலாலம்பூர் போலீஸ் தலைமையகம் அல்லது அருகிலுள்ள போலீஸ் நிலையங்களில் தொடர்பு கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு அரச மன்னிப்பு வழங்கக் கோரி அவரின் ஆதரவாளர்கள் நேற்று இஸ்தானா நெகாரா முன் ஒன்று திரண்டனர்.

எஸ்.ஆர்.சி. இண்டர்நேஷனல் நிறுவனம் ஊழல் தொடர்பில் டத்தோஸ்ரீ நஜிப்பிற்கு 12 ஆண்டுச் சிறைத்தண்டனையும் 21 கோடி வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.


Pengarang :