ECONOMYNATIONAL

2023ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் அக்டோபர் 7ஆம் தேதி தாக்கல் செய்யப்படும்

ஷா ஆலம், ஆகஸ்ட் 26: 2023ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் அக்டோபர் 7ஆம் தேதி அதாவது முன் திட்டமிடப்பட்டது விட மூன்று வாரங்களுக்கு முன்னதாக தாக்கல் செய்யப்படும் என்று நாடாளுமன்றம் மற்றும் சட்ட அமைச்சர் தெரிவித்துள்ளார்.

“ஆமாம், அது உண்மை தான். புதிய அமர்வு உண்மையில் அக்டோபர் 3 ஆம் தேதி தொடங்கும்” என்று டத்தோஸ்ரீ டாக்டர் வான் ஜுனைடி துவாங்கு ஜாபர் கூறியது மலேசியாகினி அறிக்கையில் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், புதிய தேதி மாற்றத்திற்கும் இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அவர் மறுத்தார்.

முன்னதாக, 2023 பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான புதிய தேதி குறித்து பிரதமர் இன்று அமைச்சரவை கூட்டத்தில் தெரிவித்ததாக தி ஸ்டார் செய்தி வெளியிட்டுள்ளது.

நேற்று, நிதியமைச்சர் 1 முகமது ஷஹர் அப்துல்லா, பட்ஜெட் தாக்கல் தேதி அக்டோபர் 28 அன்று பாராளுமன்ற காலண்டரில் திட்டமிடப்பட்டபடி இருக்கும் என்று தெரிவித்தார்.


Pengarang :