ECONOMYNATIONAL

அனைத்து வித பயனிட்டுகளுக்கும்  இவ்வாண்டின் இரண்டாம் அரையாண்டில் மின்சார கட்டணத்தை நிலைநிறுத்த வேண்டும் – நிதியமைச்சகம்

கோலாலம்பூர், ஆகஸ்ட் 28 – 2022 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் இருந்த அதே விகிதத்தில் 2022 ஆம் ஆண்டின் இரண்டாம் அரையாண்டில் அனைத்து நுகர்வோருக்கும் மின்சாரக் கட்டணத்தை அரசாங்கம் பராமரிக்கும்.

நிதியமைச்சகம் (MOF) இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த ஆண்டு உலக எரிபொருள் விலைகள் கடுமையாக உயர்ந்ததைத் தொடர்ந்து, மின்சார உற்பத்தி செலவு அதிகரித்தாலும், ஜூன் 24 2022 அன்று அரசாங்கம் கட்டணத்தை நிலைநிறுத்த முடிவு செய்ததாக கூறியது.

2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், நிலக்கரியின் விலை ஒரு டன்னுக்கு 80 அமெரிக்க டாலராக (RM357) ஆக இருந்தது, ஆனால் 2022 ஆம் ஆண்டின் மத்தியில், அது ஒரு டன் 400 அமெரிக்க டாலராக உயர்ந்தது.

“இதன்படி, கெலுவர்கா மலேசியாவின் அனைத்து உறுப்பினர்களின் நலனுக்காக, மின்சாரச் செலவு அதிகரிப்பின் பாதிப்பிலிருந்து அரசாங்கம் RM580 கோடி மின்சார மானியத்தை ஏற்பதாக கூறினார்.


Pengarang :