ECONOMYPENDIDIKANSELANGOR

சிலாங்கூர் அரசின் தொழில் திறன் பயிற்சியில் பங்கேற்க எஸ்.பி.எம். மாணவர்களுக்கு அழைப்பு

ஷா ஆலம், செப் 1- இன்று தொடங்கவுள்ள சிலாங்கூர் கல்வி பயணத்திட்டத்தில் பங்கேற்று பயனடையுமாறு எஸ்.பி.எம். முடித்த மாணவர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

சிலாங்கூர் மாநில தொழில்திறன் மேம்பாட்டு மையத்தின் (எஸ்.டி.டி.சி.) ஏற்பாட்டிலான இத்திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் உள்ள ஐந்து இடங்களில் கைத்தொழில் மற்றும் தொழில்திறன் பயிற்சிகள் வழங்கப்படுவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

ஆர்வமுள்ள எஸ்.பி.எம். முடித்த மாணவர்கள் இன்று தொடங்கும் இந்த தொழில்திறன் கல்வி பயணத் திட்டத்தில் பங்கேற்கலாம். இத்திட்டத்தின் கீழ் மாநில அரசின் உபகாரச் சம்பளத்துடன் கல்வியைப் பெறுவதற்குரிய வாய்ப்பு வழங்கப்படும் என்றார் அவர்.

எதிர்காலத்தில் வேலை வாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் மாநில அரசின் இலக்கின் ஒரு பகுதியாக இந்த கல்வித் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது என்று அவர் சொன்னார்.

இந்த பயிற்சியில் பங்கேற்க ஆர்வமுள்ள மாணவர்கள் தங்கள் மற்றும் தங்கள் பெற்றோரின் அடையாளக் கார்டு நகல், எஸ்.பி.எம். தேர்வு சான்றிதழ் பிரதி ஆகியவற்றை உடன் கொண்டு வருவது அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த கல்வித் திட்டம் தொடர்பில் மேல் விபரங்களைப் பெற விரும்புவோர் 03-32812621 என்ற எண்களில் அல்லது 019-34241111 என்ற வாட்ஸ்ஆப் புலனம் வாயிலாக தொடர்பு கொள்ளலாம்.

கீழ்க்கண்ட தேதி மற்றும் இடங்களில் இந்த தொழில் திறன் பயிற்சிக்கான நேர்முகப் பேட்டி நடைபெறுகிறது.


Pengarang :