ECONOMYPENDIDIKANSELANGOR

செந்தோசா சட்டமன்ற இலவச பயிற்சி வகுப்பில் 25க்கும் மேற்பட்ட சிறுவர்கள் பங்கேற்றனர்

கிள்ளான், செப் 1: செந்தோசா சட்டமன்றம் நடத்திய இலவச பயிற்சி வகுப்பில் 25க்கும் மேற்பட்ட சிறுவர்கள் பங்கேற்றனர்.

அவரது பிரதிநிதி டாக்டர் ஜி குணராஜ் கூறுகையில், இந்த வகுப்பு படிக்க மற்றும் எழுதுவதில் பின்தங்கிய சிறுவர்களுக்கு உதவும் ஒரு முயற்சியாகும்.

“மூன்று மாதங்கள் நடைபெறும் இந்த வகுப்பு, பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தும் சிறுவர்களுக்கு உதவ முன்வந்த விரிவுரையாளர்கள் ஒத்துழைப்போடு நடத்தப்படும் நிகழ்ச்சி.

பள்ளியில், ஒவ்வொரு வகுப்பிலும் மூன்று முதல் நான்கு கல்வியில் பின்தங்கிய மாணவர்கள் உள்ளனர், அவர்களுக்கு வழிகாட்டுதல் தேவை, அதனால்தான் அவர்களுக்கு உதவ இந்த திட்டத்தை நாங்கள் நடத்துகிறோம்,” என்று அவர் கூறினார்.

கடந்த ஏப்ரலில், செந்தோசா சட்டமன்றம், படிப்பதில் சிக்கல்களை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு உதவும் வகையில் இலவச வகுப்புகள் ஏற்பாடு செய்ய முன் முயற்சி எடுத்தது.

இருப்பினும், இயக்கக் கட்டுப்பாட்டு ஆணை யைத் தொடர்ந்து (MCO), பயிற்சி வகுப்பு ஆன்லைனில் தொடர்ந்தது.


Pengarang :