ECONOMYNATIONAL

உச்ச வரம்பு விலைக்கு மேல் கோழியை விற்றால் கடும் நடவடிக்கை – அமைச்சர் எச்சரிக்கை

தும்பாட், செப் 5 – உச்சவரம்பு விலையான ஒரு கிலோ 9.40 வெள்ளிக்கு மேல் கோழியை விற்கும் வியாபாரிகள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்கும் என்று பிரதமர் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ முஸ்தபா முகமது எச்சரித்துள்ளார்.

அந்த அத்தியாவசிய உணவு மூலப் பொருளுக்கு அரசாங்கம் தொடர்ந்து மானியம் வழங்கி வருவதைத் தொடர்ந்து, ஒரு கிலோ வெ. 9.40 என்ற கோழிக்கான உச்சவரம்பு விலை இன்னும் அமலில் இருப்பதாக பணவீக்கத்திற்கு எதிரான ஜிஹாத்  சிறப்புப் பணிக்குழுவின் உறுப்பினருமான முஸ்தபா கூறினார்.

நாங்கள் கோழிக்கு இன்னும் மானியம் தருகிறோம். இப்போது அதிகபட்ச விலை கிலோ ஒன்றுக்கு 9.40 வெள்ளி மட்டுமே. எனவே 9.40 வெள்ளிக்கும் மேல் விற்க எந்த காரணமும் கிடையாது. உச்சவரம்பு விலைக்கு மேல் விற்பனை செய்யும் வியாபாரிகள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்றார் அவர்.

நேற்று இங்குள்ள லாமான் வாரிசன் செனி கம்போங் லாட் மற்றும் லாமான் வாரிசான் செருண்டிங் கம்போங் லாட் ஆகிய பகுதிகளைப் பார்வையிட்ட பின்னர் செய்தியாளர் கூட்டத்தில் அவர் இதனைக் கூறினார்.


Pengarang :