ECONOMYSELANGOR

நூற்றுக்கணக்கான குடியிருப்பாளர்கள் மலிவு விற்பனை திட்டத்தில் பிகேபிஎஸ் பண்டங்களை வாங்குவதற்கான வாய்ப்பை பயன்படுத்தினர்

பெட்டாலிங் ஜெயா, செப் 5: சிலாங்கூர் வேளாண்மை மேம்பாட்டு கழகம் (பிகேபிஎஸ்) தயாரித்த பல்வேறு பொருட்களை மலிவான விலையில் பெறுவதற்கு நூற்றுக்கணக்கான குடியிருப்பாளர்கள் மாநில அரசின் பரிவுமிக்க விற்பனைத் திட்டத்தில் ஷாப்பிங் செய்யும் வாய்ப்பை பயன்படுத்தினர்.

ஷரீபா ஜூரைடா சேட் ஹுசின், 57

57 வயதான ஷரீபா ஜூரைடா சேட் ஹுசின் என்ற இல்லத்தரசி, தனது கணவருடன் சாஸ், பிஸ்கட் மற்றும் சார்டின் போன்ற பொருட்கள் சந்தையை விட மலிவாக விற்கப்படுவதை வாங்க வந்ததாக கூறினார்.

“அனைத்து தயாரிப்பு விற்பனை பண்டங்களின் விலைகள் வெளி சந்தைகளுடன் ஒப்பிடும் போது மலிவானவை. சமையலறை தேவைகளுக்கான மாதாந்திர செலவையும் குறைக்க முடியும்,” என்று அவர் நேற்று கூறினார்.

இதற்கிடையில், 44 வயதான கே மீனாட்சி, மாநில அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட மக்கள் பரிவுமிக்க விற்பனையில் கலந்து கொண்டது தனது முதல் அனுபவம் என்று கூறினார்.

கே மீனாட்சி, 44

“பிகேபிஎஸ் கொண்டு வந்த அனைத்து பண்டங்களையும் பார்த்தேன், குறிப்பாக புதிய காய்கறிகள் மற்றும் பழங்கள், விலை மலிவானது. அவர்களின் புதிய பண்டங்களான சோளம் மற்றும் காயா பாண்டானும் வாங்கினேன்.

“இந்த திட்டம் தொடர வேண்டும், ஏனெனில் இது இரட்டிப்பு சேமிப்பிற்கு கூடுதலாக மக்களுக்கு உதவுவது மட்டுமன்றி மக்கள்  பிரதிநிதிகளிடம் இருந்து RM10 பற்றுச்சீட்டுகள் மக்கள் பெற வாய்ப்புள்ளது,” என்று அவர் கூறினார்.

பொருட்களின் விலை உயர்வை தொடர்ந்து மக்களின் சுமையை குறைக்கும் வகையில் அடிப்படைப் பொருட்கள் மலிவாக விற்பனை செய்யும் திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


Pengarang :