ECONOMYHEALTHSELANGOR

இலவச மருத்துவப் பரிசோதனையில் பங்கேற்க ஸ்ரீ செர்டாங் மக்களுக்கு அழைப்பு

ஷா ஆலம், செப் 7– சிலாங்கூர் மாநில அரசின் ஏற்பாட்டில் வரும் ஞாயிற்றுக் கிழமை ஸ்ரீ செர்டாங் தொகுதியில் நடைபெறும் இலவச மருத்துவப் பரிசோதனையில் பங்கேற்று பயனடையுமாறு தொகுதி மக்கள் கேட்டுக்  கொள்ளப்படுகின்றனர்.

இந்த இலவச மருத்துவ முகாம் ஸ்ரீ கெம்பாங்கான், தாமான் லெஸ்தாரி பெர்டானா, புத்ரா பெர்மாய் எல்.பி.3 எம்.பி.எஸ்.ஜே. சமூக மண்டபத்தில் நடைபெறும் என்று தொகுதி சேவை மையம் கூறியது.

காலை 9.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை நடைபெறும் இந்த பரிசோதனையில் பங்கேற்க விரும்புவோர் செலங்கா செயலி வாயிலாக முன்பதிவு செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இந்த இலவச மருத்துவ முகாமில் அனைவரும் பங்கேற்கலாம். குறிப்பாக நோய்ப் பின்னணி கொண்டு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், உடல் பருமனானவர்கள் மற்றும் ஆரோக்கிய வாழ்க்கை முறையைக் கடைபிடிக்காதவர்கள் இந்த பரிசோதனையில் பங்கேற்க ஊக்குவிக்கப்படுகின்றனர்.

இதுவரை எந்த மருத்துவமனையிலும்  பரிசோதனையை மேற்கொள்ளாதவர்களும் தங்கள் உடல் நிலை குறித்து அறிந்து கொள்ள இத்திட்டத்தில் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

மாநிலத்திலுள்ள அனைத்து தொகுதிகளிலும் நடத்தப்படும் இந்த சிலாங்கூர் சாரிங் இலவச மருத்துவப் பரிசோதனைத் திட்டத்தின் வாயிலாக 39,000 பேர் வரை பயனடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த இலவச  மருத்துவப் பரிசோதனையை மேற்கொள்ள மாநில அரசு 34 லட்சம் வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது.


Pengarang :