ECONOMYSELANGOR

இந்த ஆண்டு பெர்மாத்தாங் சட்டமன்ற தொகுதி மக்களுக்கு 350 தீபாவளி ஷாப்பிங் பற்றுச் சீட்டுகள் தயாராக உள்ளது

கோலா சிலாங்கூர், செப் 8: பெர்மாத்தாங் சட்டமன்றம் பி- 40 மற்றும் பின்தங்கிய இந்திய  சமூகத்திற்கு இந்த ஆண்டு தீபாவளியை கொண்டாட உதவும் வண்ணமாக 350 ஷாப்பிங் பற்றுச் சீட்டுகளை வழங்குகிறது.

RM100 மதிப்பிலான ஜோம் ஷாப்பிங் தீபாவளி பற்றுச் சீட்டுகளுக்கு  RM35,000 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட தகுதியான நபர்களுக்கு விநியோகிக்கப்படும் என்று மாநில சட்டமன்ற உறுப்பினர் ரோசானா ஜைனல் அபிடின் கூறினார்.

“இந்த பற்றுச் சீட்டுக்கு உண்மையிலேயே தகுதியான பெறுநர்களைக் கண்டறியுமாறு கிராமத் தலைவர் மற்றும் இந்திய சமூகத்தின் (கே.கே.ஐ.) தலைவரைக் கேட்டுள்ளோம். அவ்வாறு செய்ய இம்மாதம் தொடக்கத்தில் இருந்து செப்டம்பர் 30 வரை ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டது.

“மிக முக்கியமாக தனிநபர் சிலாங்கூர் அரசாங்கத்திடம் இருந்து எந்த உதவியையும் மற்றும் சிலாங்கூர் வளமான வாழ்க்கை உதவியை (பிங்காஸ்) பெறாதவர்களாக இருக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.

மக்களின் நலன் மற்றும் நல்வாழ்வைப் பாதுகாக்கும் ஒரு நீண்ட கால முயற்சியாக குறைந்த வருமானம் பெறும் குழுக்களைக் குறிவைத்து மாநில அரசால் ஜோம் ஷாப்பிங் அறிமுகப்படுத்தப்பட்டது.

சிலாங்கூரில் உள்ள இனங்களின் முக்கிய கூறுகள் அந்தந்த பண்டிகைகளுக்கு ஏற்ப உதவிகள் ஒப்படைக்கப்படுகிறது.


Pengarang :