ECONOMYSELANGOR

சிலாங்கூர் வான் போக்குவரத்து கண்காட்சியை ராஜா மூடா  திறந்து வைத்தார்

சுபாங் ஜெயா, செப் 9– எஸ்.ஏ.எஸ். எனப்படும் 2022 ஆம் ஆண்டு சிலாங்கூர் வான் போக்குவரத்து கண்காட்சியை மேன்மை தங்கிய சிலாங்கூர் ராஜா மூடா தெங்கு அமீர் ஷா நேற்று அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்.

இங்குள்ள விலாயா ஸ்கைபார்க் வான் போக்குவரத்து மையத்திற்கு வருகை புரிந்த ராஜா மூடாவை மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி மற்றும் முதலீட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ தெங் சாங் கிம் ஆகியோர் வரவேற்றனர்.

நிதியமைச்சர் டத்தோஸ்ரீ ஜப்ருள் தெங்கு அப்துல் அஜிஸ், இன்வெஸ்ட் சிலாங்கூர் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ அஸாரி ஹசான்
ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வின் ஒரு அங்கமாக இடம் பெற்ற சிலாங்கூர் எவியேஷன் அண்ட் டெக்னோலோஜி இனோவேஷன்ஸ் நிறுவனத்திற்கும் வோலார் ஏர் மோபிலிட்டி நிறுவனத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு  ஒப்பந்த பரிமாற்ற நிகழ்வையும் ராஜா மூடா பார்வையிட்டார்.

பின்னர் அவர், விமான மற்றும் ஹெலிகாப்டர் கண்காட்சியை பார்வையிட்டார்.

செப்டம்பர் 8 ஆம் தேதி 10 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த கண்காட்சியில் சிங்கப்பூர், பிரேசில், பிரான்ஸ், அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட 63 நாடுகள் பங்கேற்கின்றன.

கடந்தாண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற முதலாவது வான் போக்குவரத்து கண்காட்சியில் 10 கோடி வெள்ளி மதிப்புள்ள 12 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.


Pengarang :