ECONOMYNATIONAL

தேர்தல் ஆணையம்: 43,508 புதிய வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர், அக்டோபர் 14 வரை மதிப்பாய்வு செய்யப்படும்

கோலாலம்பூர், செப்டம்பர் 15: சான்றளிக்கப்பட்டு, அரசிதழில் வெளியிடப்பட்ட ஆகஸ்ட் 2022 (DPT BLN8/2022) மாதத்திற்கான துணை வாக்காளர் பதிவேடு, இன்று தொடங்கி அக்டோபர் 14 வரை 30 நாட்களுக்கு மதிப்பாய்வுக்காக திறக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் (EC) செயலாளர் டத்தோ இக்மல்ருடின் இஷாக் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், DPT BLN8/2022 இல் கடந்த ஆகஸ்ட் 1 முதல் 31 வரையிலான காலப்பகுதியில் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட 43,508 குடிமக்கள் புதிய வாக்காளர்களாக  பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

DPT BLN8/2022 தேர்தல் பிரிவுகளை மாற்றிய மொத்தம் 19,868 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களையும், நிலை அல்லது வாக்காளர் வகையை மாற்றிய 6,544 வாக்காளர்களையும் உள்ளடக்கியதாக அவர் கூறினார்.

மதிப்பாய்வுக்காக, தேர்தல் ஆணைய போர்ட்டல் வழியாக https://www.spr.gov.my அல்லது https://mysprsemak.spr.gov.my மற்றும் மாநிலத் தேர்தலின் அதிகாரப்பூர்வ போர்டல் http://ppn.spr.gov.my என்ற இணைப்பில் ஐந்து முறைகளை தேர்தல் ஆணையம் வழங்குகிறது என்றார்.

கூடுதலாக, https://myspr.spr.gov.my, MySPR Semak மொபைல் செயலி மற்றும் 03-8892 7018 என்ற தேர்தல் ஆணைய ஹாட்லைன் மூலம் ஆன்லைன் விண்ணப்பம் மூலமாகவும் சரிபார்ப்புகளைச் செய்யலாம்.

1 ஆகஸ்ட் 2022 முதல் 31 ஆகஸ்ட் 2022 வரையிலான காலப்பகுதியில் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய குடிமக்கள் மற்றும் தேர்தல் பிரிவு மாற்றம் அல்லது நிலை மாற்றத்திற்கு விண்ணப்பித்த பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் தங்கள் பெயர்களை DPT BLN8/2022 இல் சரிபார்க்க தேர்தல் ஆணையம் அழைப்பு விடுக்கிறது.

“தங்கள் பெயர் DPT BLN8/2022 இல் பட்டியலிடப்படவில்லை என்பதைக் கண்டறிந்தால், https://myspr.spr.gov.my என்ற இணைப்பில் உள்ள ஆன்லைன் விண்ணப்பத்தின் மூலம் படிவம் C ஐப் பூர்த்தி செய்து அல்லது தொடர்புடைய மாநிலத் தேர்தல் அலுவலகத்தை தொடர்புக் கொள்ளலாம்,” என்றார்.

ஒரு குறிப்பிட்ட தேர்தல் தொகுதியில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள், மறுஆய்வு செய்து, தனது தேர்தல் தொகுயில் மாற்றம் செய்யப்பட்டிருந்தால் வாக்காளரின் பெயரை உள்ளிடுவதற்காக ஆட்சேபனை தெரிவிக்க விரும்புவோர், D படிவத்தை (ஆட்சேபணை) பூர்த்தி செய்து, சம்பந்தப்பட்ட மாநில தேர்தல் அலுவலகத்தில் கொடுக்கலாம் என்றார்.

“படிவம் C மற்றும் படிவம் D ஆகியவற்றை http://ppn.spr.gov.my என்ற இணைப்பில் உள்ள மாநில தேர்தல் அலுவலக போர்ட்டலில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம் மற்றும் DPT BLN8/2022 மதிப்பாய்வு முழுவதும் வேலை நாளிலும் அலுவலக நேரத்தில் சம்பந்தப்பட்ட மாநில தேர்தல் இயக்குனரிடம் சமர்ப்பிக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.


Pengarang :