ECONOMYNATIONAL

கிள்ளான் பள்ளத்தாக்கிலிருந்து வெளியேறும்  சாலைகளில் போக்குவரத்து அதிகரிப்பு



 ஷா ஆலம், செப் 16- மலேசிய தின விடுமுறையையொட்டி மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்புவதால் இன்று காலை கிள்ளான் பள்ளத்தாக்கிலிருந்து வெளியேறும் வழிகளில் போக்குவரத்து அதிகரிக்கத் தொடங்கியது.

இன்று காலை 9.45 மணிக்கு கிழக்கு கரையை நோக்கிச் செல்லும் தடத்தில் கோம்பாக் டோல் சாவடிக்கு நுழைவதற்கு முன்  போக்குவரத்து மெதுவாக நகர்வதாக மலேசிய நெடுஞ்சாலை ஆணையம் டிவிட்டர் பதிவில் கூறியது.

கோம்பாக்கில் இருந்து கெந்திங் செம்பா சுரங்கப்பாதை, கெந்திங் செம்பா ஓய்வு மையம் முதல் புக்கிட் திங்கி வரை மற்றும் காராக் டோல் சாவடிக்கு  முன்பும் போக்குவரத்து அதிகரித்து காணப்பட்டது.

வடக்கே, காலை மணி 9.25 அளவில் சுங்கை பூலோ மருத்துவமனையிலிருந்து சுங்கை புவாயா, புக்கிட் பெருந்தோங் முதல் புக்கிட் தாகர் மற்றும் லெம்பா பெரிங்கின் முதல் தஞ்சோங் மாலிம் வரை காலை 9.25 மணிக்கு வாகனங்கள் மெதுவாக நகர்வதைக் காண முடிந்தது.

பெஹ்ராங் ஸ்டேஷன் (வடக்கு) சுங்கை, தாப்பா முதல் கோப்பெங், மெனோரா சுரங்கப்பாதை முதல்  சுங்கை பேராக் ஓய்வுப் பகுதி மற்றும் கோல கங்சார் முதல் புக்கிட் கந்தாங்  ஆகிய பகுதிகளில் நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Pengarang :