ECONOMYSELANGOR

புக்கிட் காசிங் தொகுதியில் ஆறு இடங்களில் மலிவு விற்பனை 1,000 பேர் பயன்

பெட்டாலிங் ஜெயா, செப் 20-  கடந்த இரண்டு வாரங்களாக சிலாங்கூர் விவசாய மேம்பாட்டுக் கழகம் (பி.கே.பி.எஸ்.) மேற்கொண்டு வரும் மலிவு விற்பனைத் திட்டத்தில் புக்கிட் காசிங்கில் வசிக்கும் சுமார் 1,000 பேர் பயனடைந்துள்ளனர்.

புக்கிட் காசிங் தொகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆறு மலிவு விற்பனைத் திட்டங்கள் மூலம் இந்த எண்ணிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.ராஜீவ் கூறினார்.

இந்த வாரம் மேலும் மூன்று இடங்களில் இந்த விற்பனை தொடரும் என்றும் அவர் தெரிவித்தார்.

மாதத்தின் தொடக்கத்தில் இருந்து ஆறு இடங்களில் இந்த மலிவு விற்பனையை நடத்தியுள்ளோம். ஒவ்வொரு இடத்திலும்  300 கோழிகள் மற்றும் அரிசி, மீன், முட்டை மற்றும் எண்ணெய் போன்ற பிற அடிப்படை பொருட்களை விற்கிறோம்.

இத்திட்டத்திற்கு அனைவரிடமிருந்தும் ஊக்கமளிக்கும் வகையில் ஆதரவு கிடைத்துள்ளது.  வியாழன் அன்று  கம்போங் டாமன்சாராவிலும், வெள்ளிக்கிழமை  டாமன்சாரா, பிஸ்தாரி அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் காசிங் இண்டா அடுக்குமாடி குடியிருப்பிலும் இத்திட்டம் தொடர்கிறது. இத்திட்டத்தை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்வார்கள் என நம்புகிறோம் என்றார்.

நாங்கள் உண்மையில் இந்த திட்டத்தை ஆதரிக்கிறோம். முடிந்தால், ஒவ்வொரு வாரமும் நடத்த விரும்புகிறோம். ஏனெனில் இந்த திட்டம் மக்களின் பணத்தை மிச்சப்படுத்துகிறது என்று அவர் மேலும் கூறினார்.


Pengarang :