ECONOMYHEALTHNATIONAL

கோவிட்-19 தினசரி எண்ணிக்கை நேற்று 1,667 ஆக குறைந்தது- ஏழு மரணங்கள் பதிவு

ஷா ஆலம், செப் 21- நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை கடந்து ஐந்து நாட்களாக இரண்டாயிரத்திற்கும் கீழ் பதிவாகி வருகிறது.

நேற்று மொத்தம் 1,667 கோவிட்-19 சம்பவங்கள் பதிவான வேளையில் கடந்த 19 ஆம் தேதி இந்த எண்ணிக்கை 1,307 ஆகவும் 18 ஆம் தேதி 1,639 ஆகவும் 17 ஆம் தேதி 1,572 ஆகவும் 16 ஆம் தேதி 1,977 ஆகவும் இருந்தது.

நேற்றைய தொற்றுகளுடன் சேர்த்து நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 48 லட்சத்து 21 ஆயிரத்து 864 ஆக உயர்வு கண்டுள்ளதாக சுகாதார அமைச்சின் கோவிட்நாவ் அகப்பக்கம் கூறியது.

நாட்டில் தற்போது 24,715 பேர் கோவிட்-19 நோயின் தீவிர தாக்கத்தை எதிர்நோக்கியுள்ளனர். அவர்கள் 23,577 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட வேளையில் 1,979 பேர் மருத்துவமனைகளிலும் 57 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவிலும் இருவர் தற்காலிக தனிமைப்படுத்தும் மையங்களிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில்  உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவு வார்டுகளில் கட்டில்களின் பயன்பாடு 63 விழுக்காடாக உள்ளது. அதில் உள்ள கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை 16.1 விழுக்காடாகும்.

நாட்டில் நேற்று கோவிட்-19 தொடர்புடைய ஏழு மரணச் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டன. இதனுடன் சேர்த்து அந்நோய்த் தொற்றுக்கு பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 36,324 ஆக உயர்ந்துள்ளது.


Pengarang :