ECONOMYSELANGOR

டிவிட்டர் வழி புகார் கிடைத்த 24 மணி நேரத்தில் பழுதான சாலை சீரமைப்பு

ஷா ஆலம், செப் 22- பொது மக்கள் டிவிட்டர் வழி புகார் அளித்ததைத் தொடர்ந்து கம்போங் பாயா ஜெராஸ், ஜாலான் ராடின் 1, சாலை 24 மணி நேரத்தில் சீரமைக்கப்பட்டது.

இன்ப்ராசெல் என்ற டிவிட்டர் பதிவின் வாயிலாக புகார் கிடைத்ததைத் தொடர்ந்து தாங்கள் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டதாக மாநிலத்தில் சாலை பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வரும் நிறுவனமான இன்ப்ராஜெல் சென். பெர்ஹாட் கூறியது.

ஆகவே தங்கள் பகுதியில் பழுதான சாலைகள் குறித்த தகவல்களை ஹெஷ்டேக் குறியுடன் #namajalan #daerah என டிவிட்டரில் பதிவேற்றம் செய்யும்படி அந்நிறுவனம் கேட்டுக் கொண்டது.

பழுதான சாலைகள் குறித்த புகார்களை டிவிட்டர் பதிவின் வழி தெரிவிக்கும்படி பொது மக்களை மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கடந்த செப்டம்பர் 8 ஆம் தேதி கேட்டுக் கொண்டார்.

சிலாங்கூரில் சாலை பழுது தொடர்பில் பொது மக்கள் புகார் செய்வதை இந்த டிவிட்டர் செயலி எளிதாக்கியுள்ளது என அவர் குறிப்பிட்டிருந்தார்.


Pengarang :