ECONOMYHEALTHNATIONAL

1,1136 ஒப்பந்த தாதியர் நிரந்தரப் பணி நியமனம் பெறுவர்- அமைச்சர் கைரி தகவல்

ஜோகூர் பாரு, செப் 23- தற்போது ஒப்பந்தப் பணியாளர்களாக இருந்து வரும் மலேசிய சுகாதார அமைச்சின் பயிற்சி கல்லூரியில் பயிற்சி பெற்ற 1,236 தாதியர் இவ்வாண்டின் நான்காம் காலாண்டு மற்றும் அடுத்தாண்டின் முதல் காலாண்டில் நிரந்தரப் பணியாளர்களாக நியமனம் பெறுவர்.

கோவிட்-19 காலத்தில் சுகாதார அமைச்சில் பணியாற்றுவதற்காக ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட 2,804 தனியார் தாதியரை நிரந்தரப் பணியாளர்களாக ஆக்கும் நடவடிக்கையை பொதுச் சேவைத் துறை ஆணையம் கட்டம் கட்டமாக மேற்கொள்ளும் என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்தார்.

தாதியர் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்ற கிரேட் யு29 மற்றும் யு32 தகுதி கொண்ட தாதியர் அடிப்படையில் கிரேட் யு41 மற்றும் யு42 பிரிவுக்கு பதவி உயர்வு பெறும் தகுதியைக் கொண்டுள்ளனர் என்று அவர் சொன்னார்.

தாய் சேய் மருத்துவ கிளினிக்குகள் மற்றும் கிராம கிளினிக்குகளில் சேவைத் தரம் உயர்வாக இருப்பதை உறுதி செய்ய கிரேட் யு19 சமூக தாதியரின் அந்தஸ்தை கிராட் யு19/ தாதியர் கிரேட் யு29க்கு உயர்த்துவதற்கான  விண்ணப்பத்தை சுகாதார அமைச்சு செய்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த நடவடிக்கையின் வாயிலாக தாதியர் துறையில் டிப்ளோமா பெற்றுள்ள கிரேட் யு19 தகுதி கொண்ட 1,406 தாதியர் கிரேட் யு29 பிரிவு தாதியராக நியமனம் பெறுவர் என்றார் அவர்.


Pengarang :