ACTIVITIES AND ADSHEALTHMEDIA STATEMENT

எதிர் மறையான எண்ணங்களைக் களைவீர்! உரிய தரப்பினரிடம்  ஆலோசனை பெறுவீர்- சித்தி மரியா வேண்டுகோள்

ஷா ஆலம், செப் 24 - தொடர்ச்சியாக எதிர்மறை எண்ணங்களைக் கொண்டிருப்பவர்களுக்கு மனநலப் பிரச்சினைகள் உண்டாக்ககூடும். அவர்கள் உரிய தரப்பினரின் உதவியை நாடவில்லை என்றால் அதிக ஆபத்துக்கு வழிவகுக்கும்.

 இத்தகைய தரப்பினர் தங்களின் எதிர்மறை எண்ணங்களைக் களைந்து தகுதியான ஆலோசகர்களிடம் பேச சிலாங்கூர் மனநல (செஹாட்) ஹாட்லைனை அணுகுமாறு பொது சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் வலியுறுத்தினார்.

தஙகளுக்குள் எதிர்மறையான விஷயங்கள்  உருவாக்குவதைத் தவிர்த்து சாதகமான விஷயங்களின் உருவாக்கத்திற்கு வழி வகுக்கக்கூடிய மூன்று படிநிலைகள் உள்ளன  அவர் கூறினார்.

உங்களைச் சுற்றி நடக்கக் கூடிய விஷயங்கள் அதாவது உங்களைப் பற்றி கவலைப்    படாதவர்களை நீங்கள் பொருட்படுத்த வேண்டாம் என்றார் அவர்.

உங்களுக்கு யாரிடமாவது ஆலோசனைப் பெற வேண்டும்  என்றால், சேஹாட் ஆலோசகரைத் தொடர்பு கொள்ளுங்கள்" என்று அவர் தனது முகநூல் பதிவில் கூறினார்.

ஆலோசகர்களுடன் பேச விரும்புவோர் சேஹாட் 24 மணிநேர ஹாட்லைனை 1700-82-7536 அல்லது 1700-82-753 என்ற எண்ணில், செலங்கா மொபைல் ஆப் மூலம் தொடர்பு கொள்ளலாம் அல்லது www.drsitimariah.com/sehat என்ற அகப்பக்கத்தை வலம் வரலாம்

Pengarang :