ECONOMYSELANGOR

சுங்கை ரமால் சட்டமன்ற உறுப்பினர் 450 முதியவர்களுக்கு RM100 மதிப்பிலான தீபாவளி பற்றுச் சீட்டுகளை வழங்கினர்.

ஷா ஆலம், செப்டம்பர் 27: அடுத்த மாதம் தீபாவளி பண்டிகையை ஒட்டி சுங்கை ரமால் சட்டமன்ற தொகுதியில் வாழும் இந்துகளுக்கு RM100 மதிப்பிலான 450 பற்றுச்சீட்டுகள் விநியோகிக்கப்பட்டன.

ஜோம் ஷாப்பிங் ராயா திட்டம் அக்டோபர் 16 அன்று காஜாங்கில் உள்ள எகோன்சேவ் ஜாலான் ரெகோவில் விநியோகம் செய்யப்படும் என்று பிரதிநிதி மஸ்வான் ஜோஹர் கூறினார்.

” குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள், ஒற்றை தாய்மார்கள் மற்றும் குறைபாடுகள் உள்ள அனைத்து பயனாளிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

“தீபாவளி பண்டிகையின் போது ஏற்படும் தேவைகள் மற்றும் செலவீன சுமையை குறைக்கும் ஒரு நடவடிக்கையாக மாநில அரசின் இந்த அன்பளிப்பு விளங்குவதாக என்று அவர் சிலாங்கூர்கினியிடம் கூறினார்.

மக்கள் நலன் மற்றும் நல்வாழ்வைக் காக்கும் நீண்ட கால முயற்சியாக குறைந்த வருமானம் பெறும் பிரிவினரை இலக்காகக் கொண்டு ஜோம் ஷாப்பிங் ராயா மாநில அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.

இனம் மற்றும் கொண்டாட்டத்தின் முக்கிய கூறுகளுக்கு ஏற்ப ஒவ்வொரு பகுதியிலும் சமூக சேவை மையங்கள் மூலம் உதவிகளை ஒப்படைத்தல் செய்யப்படுகிறது.


Pengarang :