ECONOMYNATIONAL

மணிலா மாட்ரெட் வர்த்தகத் பணித்திட்டம் வழி 6.7 கோடி வெள்ளி வர்த்தகம் பதிவு

கோலாலம்பூர், செப் 27- இவ்வாண்டு ஆகஸ்டு மாதம் 22 முதல் 26 முதல் பிலிப்பைன்சின் மணிலாவில் நடைபெற்ற ஏற்றுமதி உந்துதல் பணித் திட்டம் (இ.ஏ.எம்.) மூலம் மலேசியா 6 கோடியே 70 லட்சத்து 50 ஆயிரம் வெள்ளி மதிப்பிலான வர்த்தகத்தைப் பதிவு செய்தது.

தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சு மற்றும் எஸ்.எம்.இ. வங்கியின் ஒத்துழைப்புடன் மலேசிய வெளி வாணிக மேம்பாட்டுக் கழகம் (மாட்ரெட்) இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருந்தது.

பிலிப்பைன்சில் உள்ள வர்த்தக பங்காளிகளுக்கும் 12 மலேசிய நிறுவனங்களுக்கும் இடையே 140 வர்த்தக கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக மாட்ரெட் அறிக்கை  ஒன்றில் தெரிவித்தது.

மாட்ரேட், தொழில்முனைவோர் மேம்பாட்டுத் துறை அமைச்சு மற்றும் எஸ்.எம்.இ. வங்கியுடனான ஒத்துழைப்பு வர்த்தக சூழலியல் முறையில் புதிய உத்வேகத்தை ஏற்படுத்தி மலேசிய வர்த்தகத்தை குறிப்பாக நமது ஏற்றுமதியாளர்கள் உலகளாவிய நிலையில் ஆக்கத்தன்மையுடன் செயல்படுவதற்குரிய வாய்ப்பினை ஏற்படுத்தியுள்ளது என அது குறிப்பிட்டது.


Pengarang :