ECONOMYNATIONALPENDIDIKAN

மாணவர்கள் கடத்தப்படுவதாக புகார்- விரிவான அறிக்கைக்காக கல்வியமைச்சு காத்திருக்கிறது

சுங்கை பட்டாணி, செப் 27- அண்மைய காலமாக சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வரும் கிளந்தானில் மாணவர்களை கடத்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது என்ற குற்றச்சாட்டு தொடர்பான விரிவான அறிக்கைக்காக கல்வியமைச்சு காத்திருக்கிறது.

அந்த அறிக்கை கிடைக்கும் வரை இவ்விவகாரம் குறித்து கல்வியமைச்சு எந்த கருத்தையும் வெளியிடாது என்று துணைக் கல்வியமைச்சர் 11 டத்தோ டாக்டர் மா ஹாங் சூன் கூறினார்.

இந்த விவகாரம் குறித்து கருத்துரைப்பதற்கு முன்னர் அதன் தொடர்பான விரிவான அறிக்கைக்காக அமைச்சு காத்திருக்கிறது என்றார் அவர்.

இன்று இங்கு தேசிய நிலையிலான அனைத்துலக பள்ளி பால் தினத்தை தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

மாணவர்களை கடத்தும் அல்லது கடத்த மேற்கொள்ளும் முயற்சிகளை கண்டறிவதற்கு ஏதுவாக பள்ளியின் பிரதான நுழைவாயிலில் அல்லது பாதுகாவலர் சாவடியில் கண்காணிப்பு கேமராக்களை கல்வியமைச்சு பொருத்த வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பில் துணையமைச்சர் இவ்வாறு கருத்துரைத்தார்.

கிளந்தான் மாநிலத்தின் குவா மூசாங், கோல கிராய் மற்றும் பாசீர் பூத்தே ஆகிய பகுதிகளில் ஆரம்பப் பள்ளி மாணவர்களைக் கடத்த முயற்சி மேற்கொள்ளப்படுவதாக வெளி வந்த தகவல்கள் குறித்து தாங்கள் விசாரணை நடத்தி வருவதாக மாநில போலீசார் கடந்த 22 ஆம் தேதியும் நேற்றும் கூறியிருந்தனர்.


Pengarang :