ECONOMYSELANGOR

உணவுப் பொருள்களுக்கான செலவை குறைப்பதில் மலிவு விற்பனை பேருதவி- பொதுமக்கள் கருத்து

சுபாங் ஜெயா, செப் 27- சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்தினால் (பி.கே.பி.எஸ்.) ஏற்பாடு செய்யப்பட்ட அத்தியாவசியப் பொருள் மலிவு விற்பனைத் திட்டம் குடும்பச் செலவுகளை குறைப்பதில் துணை புரிவதாக பொது மக்கள் கூறுகின்றனர்.

வீட்டில் அத்தியாவசிய உணவுப் பொருள்கள் தீர்ந்து விட்ட நிலையில் சுபாங் ஜெயா தொகுதி நிலையில் நடைபெறும் இந்த மலிவு விற்பனையில் கலந்து பொருள்களை வாங்க தன் மனைவியுடன் தாம் வந்ததாக அப்துல் ஹாடி அகமது (வயது 28) கூறினார்.

அப்துல் ஹாடி அகமது, 28

இப்போதுதான் முதன் முறையாக நான் இந்த மலிவு விற்பனைக்கு வருகிறேன். இங்கு இங்கு விற்கப்படும் பொருள்கள் விலை மலிவாக உள்ளது என்று விற்பனை முகவரான அவர் தெரிவித்தார்.

இந்த மலிவு விற்பனையில் கோழி, முட்டை, அரிசி மற்றும் மீன் ஆகியவற்றை வெறும் 76.00 வெள்ளிக்கு வாங்கியதாக மற்றொரு பயனீட்டாளரான ரோஹானா அபிடின் (வயது 57) கூறினார்.

ரோஹானா அபிடின், 57

நான் இப்போதுதான் சொந்த கிராமத்திலிருந்து வந்தேன். வீட்டில் சமையல் பொருள்கள் தீர்ந்து விட்டதால் இங்கு பொருள்கள் வாங்க வந்தேன். இந்த விற்பனையின் மூலம் நான் 50.00 வெள்ளியை மிச்சப்படுத்தி விட்டேன் என அவர் சொன்னார்.

பொருள் விலை அதிகரித்துள்ள நிலையில் மாநில அரசின் இந்த மலிவு விற்பனை தங்களுக்கு பெரும் துணையாக உள்ளதாக தனியார் துறை ஊழியரான ஓங் கேஎல் (வயது 73) குறிப்பிட்டார்.

ஓங் கேஎல், 73

பொது மக்களுக்கு குறிப்பாக குறைந்த வருமானம் பெறும் தரப்பினருக்கு பயனளிக்கும் வகையில் இந்த விற்பனைத் திட்டம் மாதந்தோறும் நடத்தப்பட வேண்டும் என தாம் விரும்புவதாகவும் அவர் சொன்னார்.


Pengarang :