ECONOMYSELANGOR

சிலாங்கூர் திருமணம் ஆகாத மற்றும் புதுமணத் தம்பதிகளுக்கு வீட்டுத் திட்டத்தை நிறைவேற்றுகிறது

கிள்ளான், அக் 1: திருமணம் ஆகாத மற்றும் புதுமணத் தம்பதிகளுக்கு சொந்தமாக ஒரு குடியிருப்பை பெறும் வண்ணம், ஏதுவான வீடு வாங்கும் திட்டத்தை மாநில அரசு கொண்டுள்ளது. ரூமா சிலாங்கூர் கூ 3.0 கொள்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த திட்டத்தில் அமைக்கப்படும் வீடு,  RM120,000 வரை விற்கப்படும் என்றும், மலிவு விலை வீடு என்று அது  வகைப்படுத்தப்பட்டுள்ளது என்றும் வீட்டுவசதி ஆட்சிக்குழு உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் கூறினார்.

“அது குறித்த முழு தகவலை டத்தோ மந்திரி புசார் விரைவில் அறிவிப்பார். இந்த இரண்டு  பிரிவினர் கோரிக்கைகள் மற்றும் தேவைகளை நாங்கள் கணக்கில் எடுத்துக் கொண்ட பிறகு இந்த கொள்கை உருவாக்கப்பட்டது.

“அதே நேரத்தில், சிலாங்கூர் அரசு ஊழியர்களுக்கு வீட்டுத் திட்டத்தையும் அறிவிக்கும்” என்று அவர் இன்று கம்போங் குவாந்தானில் நடந்த பத்து திகா சட்டமன்ற மக்கள் நலப் திட்டதின் போது கூறினார்.

செப்டம்பரில், டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தனது கட்சி திருமணம் ஆகாதவர் மற்றும் புதுமணத் தம்பதிகளுக்கு ஒன்று மற்றும் இரண்டு அறைகள் கொண்ட வீடுகள் கட்டும் என்றார்.

பெட்டாலிங் ஜெயா, சுபாங் ஜெயா, அம்பாங் மற்றும் ஷா ஆலம் ஆகியவற்றைச் சுற்றி கட்டுமான இடங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

வாடகை மூலம் 5000 ரூமா சிலாங்கூர் கூ வீடுகளை வழங்குவதற்கான திட்டத்திற்கான முக்கிய ஏற்பாடாக எதிர்வரும் மாநில பட்ஜெட் இருக்கும் என மாநில  வீட்டுவசதி ஆட்சிக்குழு உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் கூறினார்.


Pengarang :