ECONOMYSELANGOR

தீபாவளியைக் கொண்டாடும் இந்திய சமூகமும் பிகேபிஎஸ் இன் மலிவு விற்பனையில் பொருட்களை வாங்கி பயனடைகிறது

கோம்பாக், அக் 3: செலாயாங் முலியா அடுக்குமாடி குடியிருப்பில் வாழும் சுங்கை துவா சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மக்கள், ஏசான் மலிவு விற்பனை திட்டத்தில் பங்கு கொகொண்டு தீபாவளிக்கு தேவையான பொருட்களை வாங்க இந்திய சமூகம் பயன்படுத்திக் கொள்கிறள்கிறது.

எம் ராஜேஷ்வரி, 60

மூத்த குடிமகள் எம் ராஜேஷ்வரி, 60, அவரும் அவரது கணவர் எம் முனுசாமி, 70, வீட்டில் அத்தியாவாசிய பொருட்கள் குறைவாக இருப்பதால், ஒவ்வொருவரும் அரிசி மற்றும் சமையல் எண்ணெய் வாங்கினோம்.இது தீபாவளி காலத்திலும் பயன்படுத்தலாம்.’’

ஆனால், கோழி மீன் போன்றவைகள், மற்ற இடங்களை விட, விலை குறைவாக இருப்பதால் அன்றாட தேவைக்கு கோழி மற்றும் முட்டைகளையும் வாங்குகிறோம். அருகில், RM16 முதல் RM20 வரையிலான  சந்தை விலையுடன்  ஒப்பிடும்போது, இங்கு மலிவாக  விற்பனை செய்யப்படுகிறது. இங்கு ஒரு கோழி  RM 10 என்ற விலையில் விற்கப்படுகிறது. இதனால் சிறிது பணத்தை மிச்சப்படுத்தலாம்” என்று நேற்று சந்தித்தபோது கூறினார்.

எஸ் அந்தி, 44

44 வயதான இல்லத்தரசியான எஸ் அந்தி, தீபாவளி அக்டோபர் 24ஆம் தேதி கொண்டாடப்படுவதற்கு முன்பாக, சிலாங்கூர் வேளாண்மை வளர்ச்சிக் கழகத்தை மேலும் பல நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.

“முடிந்தால் மற்ற பொருட்களையும் தயார் செய்து கொள்ளுங்கள், அதனால் நமக்கு தேவையானதை குறைந்த விலையில் பெறலாம்,” என்று அவர் கூறினார்.


Pengarang :