ECONOMYNATIONAL

அக்டோபர் 6 அன்று தொடங்கும் மாநில வணிக உச்சி மாநாடு RM35 கோடி விற்பனையை இலக்காகக் கொண்டது.

ஷா ஆலம், 3 அக்: இரண்டு ஆண்டுக் கால கோவிட்-19 தொற்று நோய் கால கட்டத்தை தவிர்த்தால், சிலாங்கூரின் சர்வதேச வணிக உச்சி மாநாட்டின் (சிப்ஸ்) பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்வு கண்டு வருவதை காண முடிகிறது.

முதலீடுகளுக்கு  பொறுப்பான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ தெங் சாங் கிம், 2015 இல் தொடங்கிய போது மொத்தம் RM18.2 கோடி பதிவு செய்யப்பட்டு நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு RM 44.7 கோடியாக கணிசமாக அதிகரித்துள்ளது  என்று விளக்கினார்.

“பரிவர்த்தனைகளில் ஏற்ற தாழ்வுகள் உள்ளன. இந்த தொகை 2015 இல் RM18.2 கோடி, RM 10 கோடி (2016), RM20.42 கோடி (2017), RM19.46 கோடி (2018). பின்னர் 2019ல் திடீரென RM 44.7 கோடியாக உயர்ந்தது.

“ஆனால் தொற்று நோய் அந்த மதிப்பை 2020 இல் RM 10.9 லட்சமாக குறைந்தது (முற்றிலும்  ஆன்லைனில் இருக்கும் போது). 2021 ஆம் ஆண்டில், நிகழ்வு ஒரு கலப்பின முறையில் நடைபெற்ற, பரிவர்த்தனைகள் RM21.76 கோடியாக உயர்ந்தது என்று அவர் சமீபத்தில் சிலாங்கூர்கினியிடம் கூறினார்.

அக்டோபர் 6 ஆம் தேதி கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் சிலாங்கூர் ராஜா மூடா  தெங்கு அமீர் ஷா இந்த நிகழ்வை தொடங்கி வைக்க உள்ளார். மேலும் டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி மற்றும் தெங் சாங் கிம் ஆகியோர் கலந்து கொள்வர்.

RM35 கோடி வரை சாத்தியமான விற்பனையை இலக்காகக் கொண்ட நான்கு நாள் மாநாடு, 850 கண்காட்சி தளங்களை வழங்குவதோடு கூடுதலாக 30,000 வருகையாளர்களை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிப்ஸ் இல் உள்ள ஆறு முக்கிய நிகழ்வுகள் கீழ்வருமாறு:

  • சிலாங்கூர் சர்வதேச கண்காட்சி (உணவு மற்றும் குளிர்பானம்)

  • சிலாங்கூர் சர்வதேச கண்காட்சி (மருந்து)

  • சிலாங்கூர் இண்டஸ்ட்ரியல் பார்க் கண்காட்சி

  • சிலாங்கூர் ஸ்மார்ட் சிட்டி மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம்

  • சிலாங்கூர் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மற்றும் கண்டுபிடிப்பு கண்காட்சி

  • ஆசிய வணிக மாநாடு

மேலும் கருத்து தெரிவிக்கையில், மலேசியாவில் உள்ள மாநிலங்களுடன் மட்டும் போட்டியிடாமல், சிலாங்கூரை ஒரு பிராந்திய பொருளாதார சக்தியாக நிலைநிறுத்த சிப்ஸ் திறன் கொண்டது என்றும் சாங் கிம் நம்புகிறார்.


Pengarang :