ECONOMYHEALTHSELANGOR

சிலாங்கூர் சாரிங் வழி 40,000 பேர் பயன்- திட்டத்தை தொடர மாநில அரசு விருப்பம்

ஷா ஆலம், அக் 3- நோய் தொடர்பான பரிசோதனைகளை மேலும் அதிகமானோர் பெறுவதற்கு ஏதுவாக சிலாங்கூர் சாரிங் இலவச மருத்துவ பரிசோதனைத் திட்டத்தை தொடர மாநில அரசு எண்ணம் கொண்டுள்ளது.

மொத்தம் 34 லட்சம் வெள்ளி நிதி ஒதுக்கீட்டில் கடந்த மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட இந்த சிலாங்கூர் சாரிங் திட்டத்தின் மூலம் சுமார் 40,000 பேர் பலனடைந்துள்ளனர் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

மக்கள் மத்தியில் சாதகமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளதால் இத்திட்டத்தை தொடர மாநில  அரசு விருப்பம் கொண்டுள்ளது என அவர் சொன்னார்.

சிலாங்கூர் அரசு நோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக  பல்வேறு திட்டங்களை அமல்படுத்தியுள்ளது. நோய்த் தடுப்புத் திட்டங்களை மேற்கொள்வதற்கான நேரம் தற்போது விட்டது என்று அவர் தனது முகநூல் பதிவில்  குறிப்பிட்டுள்ளார்.

இந்த பரிசோதனைத் திட்டத்தில் வழக்கமான பரிசோதனைகள் தவிர்த்து, இரத்த, சிறுநீர், கண், கருப்பை வாய்ப் புற்றுநோய், மார்பக புற்று நோய், புரொஸ்டட் புற்று நோய் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

நோய்ப் பின்னணி கொண்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், உடல் பருமனானவர்கள் மற்றும்  ஆரோக்கிய வாழ்க்கை முறையை கடை பிடிக்காதவர்களை இலக்காக கொண்டு இந்த பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.


Pengarang :