ECONOMYSELANGOR

வெற்றிகரமான சமூக-பொருளாதார திட்டங்களுக்கு கூடுதல் நிதி, அதிக தொழில் முனைவோருக்கு உதவுகிறது

ஷா ஆலம், 4 அக்: இந்த மாத இறுதியில் தாக்கல் செய்யப்பட உள்ள சிலாங்கூர் பட்ஜெட் 2023, அதிகாரமளித்தல், சமூக-பொருளாதார மேம்பாடு மற்றும் சம்பந்தப்பட்ட அரசாங்கத்தின் போர்ட்ஃபோலியோவின் கீழ் உள்ள திட்டங்களுக்கு கூடுதல் ஒதுக்கீடு களை வழங்க பரிந்துரைக்கப்படுகிறது.

வறுமை ஒழிப்பு புளூபிரிண்ட் உதவித் திட்டத்திற்கான இந்த கூடுதல் நிதிகள் அதிக தொழில் முனைவோர் தங்கள் வணிகங்களை நடத்துவதற்கான வணிக கருவிகளைப் பெறுவதற்கு பயனளிக்கும் என்று அதன் ஆட்சிக்குழு உறுப்பினர் வீ கணபதிராவ் கூறினார்.

“இந்த திட்டம் 2008 இல் அறிமுகப்படுத்தப் பட்டது, ஒவ்வொரு ஆண்டும் RM20 லட்சம் நிதியுடன், இப்போது வரை உள்ளது. விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதைக் கருத்தில் கொண்டு இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது” என்று அவர் தொடர்பு கொண்ட போது தெரிவித்தார்.

அதே நேரத்தில், பண்டிகைக் கால ஜோம் ஷாப்பிங் திட்டம் மற்றும் மூத்த குடிமக்கள் நலத்திட்டம் (எஸ்எம்யுஇ) ஆகியவற்றுக்கான நிதியை அதிகரிப்பதன்

வழி, இலக்கு வைக்கப்பட்ட அதிகப்படியான குழுக்களுக்கு உதவும் என தான் நம்புவதாக  அவர் கூறினார்.

சிலாங்கூர் ஊழியர் அதிகாரமளிக்கும் பிரிவு (யுபிபிஎஸ்) மூலம் மாநிலத்தில் வேலைவாய்ப்பின்மை பிரச்சனையை சமாளிக்கும் வகையில் தொழில் கார்னிவல் செயல்படுத்த கூடுதல் ஒதுக்கீடுகளை கணபதிராவ் கோரினார்.

“முன்பு நாங்கள் ஒன்பது மாவட்டங்களில் தொழிலாளர் துறை மற்றும் சமூக பாதுகாப்பு அமைப்பு (Socso) உள்ளிட்ட பல்வேறு அரசு நிறுவனங்களுடன் இணைந்து தொழில் கார்னிவலை நடத்தியுள்ளோம்.

“எனவே, இந்த விவகாரம் பரிசீலிக்கப்படும் என்று நான் நம்புகிறேன். பல்வேறு துறைகளைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் பங்கேற்பின் விளைவாக சுமார் 2,500 நபர்கள் வேலை சந்தையில் ஒரு இடத்தைப் பெற்றபோது இந்த அமைப்பு பயனுள்ளதாக இருந்தது,” என்று அவர் கூறினார்.

 கோத்தா கெமுனிங்கின் சட்டமன்ற  பிரதிநிதியான அவர், முஸ்லிம் அல்லாத குறிப்பாக இந்திய வழிபாட்டு தலங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய கூடுதல் மானிய ஒதுக்கீடுக்கும் அவர்  கோரிக்கை  வைத்தார்.

டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, அக்டோபர் 28ஆம் தேதி சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தில் 2023 ஆண்டு பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.

அதை சிலாங்கூர் டிவி சேனல் (selangortv.my) மற்றும் சிலாங்கூர் மீடியா பேஸ்புக் (www.facebook.com/MediaSelangor) மூலம் நேரடியாக பின்தொடரலாம்.


Pengarang :