ACTIVITIES AND ADSECONOMYMEDIA STATEMENT

ஜெராம் தொகுதியில் 348 பேர் ஆண்டுக்கு 3,600 ரிங்கிட் உதவித் தொகை பெறுவர்

கோல சிலாங்கூர், அக் 12- ஜெராம் தொகுதியைச் சேர்ந்த குறைந்த வருமானம் பெறும் பி40 பிரிவைச் சேர்ந்த 348 குடும்பங்கள் சிலாங்கூர் மாநில அரசின் நல்வாழ்வு உதவித் திட்டத்தின் (பிங்காஸ்) கீழ் ஆண்டுக்கு 3,600 வெள்ளி உதவித் தொகையைப் பெறுவர்.

அவர்களில் 300 பேர் மாதம் 300 ரிங்கிட் வீதம் உதவித் தொகையைப் பெறத் தொடங்கிவிட்டதாக ஜெராம் தொகுதியின் ஒருங்கிணைப்பாளர் நக்முடின் ஹூசேன் கூறினார்.

பிங்காஸ் திட்டத்திற்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள்  கிடைக்கப்பெற்றன. இந்த திட்டத்தில் பங்கேற்பதற்கான நிபந்தனைகள் கடுமையாக உள்ளதால் எஞ்சிய 40 பயனாளிகளை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். உண்மையில் தகுதி உள்ள குடும்பங்களுக்கு இந்த உதவி சென்று சேர வேண்டும் என விரும்புகிறோம் என்றார் அவர்.

விண்ணப்பாதாரர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்யும் பணியில் கிராமத் தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதிக உறுப்பினர்கள் கொண்ட குடும்பங்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை அளிக்கிறோம் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

நேற்று இங்குள்ள டேசா கோல்பில்ட் எம்.டி.கே.எஸ்  மண்டபத்தில் நடைபெற்ற மக்கள் மலிவு விற்பனைத் திட்டத்தின் போது செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.


Pengarang :