ECONOMYSELANGOR

இன்று மேலும் ஒன்பது இடங்களில் மாநில அரசின் மலிவு விற்பனை

ஷா ஆலம், அக் 13- சிலாங்கூர் அரசின் அத்தியாவசியப் பொருள் மலிவு விற்பனை இன்று மேலும் ஒன்பது இடங்களில் காலை 9.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடைபெறும்.

ஜெலாஜா ஏசான் ராக்யாட் எனும் இந்த மலிவு விற்பனை கம்போங் சுங்கை நிப்பா (சுங்கை பாஞ்சாங் தொகுதி), பங்சாபுரி ஏ1 திடல் (தெராத்தாய் தொகுதி), தாமான் செமினி இம்பியான் ((செமினி தொகுதி), அரிப் பிஸ்ட்ரோ செக்சன் 24 மற்றும் கம்போங் பாரு சுங்கை சோ (பலாக்கோங் தொகுதி) ஆகிய இடங்களில் நடைபெறும்.

இவை தவிர, பிஜேஎஸ்1/52 மதராஸா ஹாஜ்ஜா ஜூபைடா, பெட்டாலிங் ஜெயா (தாமான் மேடான் தொகுதி), சுபாங் 2 பாசார் மாலாம் மையம் (கோத்தா டாமன்சாரா தொகுதி), கம்போங் சுங்கை பினாங் பள்ளிவாசல் வளாகம் (செமன்தா தொகுதி), கம்போங் ஜென்டேராம் உலு பாலாய் ராயா ( சுங்கை பீலேக் தொகுதி) ஆகிய இடங்களிலும் இந்த விற்பனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த மலிவு விற்பனையில்  நடுத்தர கோழி 10.00 வெள்ளிக்கும் இறைச்சி ஒரு பாக்கெட் 10.00 வெள்ளிக்கும் பி கிரேடு முட்டை ஒரு தட்டு 10.00 வெள்ளிக்கும் கெம்போங் மற்றும் செலாயாங் மீன் ஒரு பாக்கெட் 6.00 வெள்ளிக்கும் 5 கிலோ போத்தல் சமையல் எண்ணெய் 25 வெள்ளிக்கும் 5 கிலோ அரிசி 10.00 வெள்ளிக்கும் விற்கப்படுகிறது.

மாநிலத்தின் 56 சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள 160 இடங்களில் கடந்த மாதம் 6 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 6 ஆம் தேதி வரை இந்த மலிவு விற்பனை நடைபெறுகிறது.

இந்த மலிவு விற்பனைத் திட்டத்தை நடத்துவதற்கு மாநில அரசு ஒரு கோடி வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது.


Pengarang :