ECONOMY

மக்களுக்கு உதவுவதில் நாங்கள் சமயம், சரும நிறம் பார்ப்பதில்லை- மந்திரி புசார்

ஷா ஆலம், அக் 13 – சிலாங்கூர் அரசாங்கத்தால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் ஒரு இனத்தை மையமாகக் கொண்டவை அல்ல. மாறாக ஒவ்வொரு தனிமனிதனின் தேவைக்கேற்ப உருவாக்கப்பட்டவை என்று மந்திரி புசார் கூறினார்.

அண்மைய ஆண்டுகளில் அனைத்து குடிமக்களுக்கும் பயனளிக்கும் வகையிலான சுகாதார மற்றும் கல்வித் திட்டங்களுக்காக கோடிக்கணக்கான ரிங்கிட்டை மாநில அரசு செலவிட்டுள்ளது என்றார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி சொன்னார்.

நாங்கள் எந்த ஒரு திட்டத்தையும் மலாய்க்காரர்கள் மற்றும் மலாய்க்காரர்கள் அல்லாதவர்கள் என்ற பாகுபாடின்றி  அனைத்து இன மக்களுக்காகவும் அமல்படுத்துகிறோம் என அவர் குறிப்பிட்டார்.

நேற்றிரவு வணக்கம் மலேசியா இணைய ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி இதனைக் கூறினார்.

எங்கள் கொள்கை சரும நிறம் அல்லது மதத்தின் அடிப்படையில் அல்லாமல் மக்களின் தேவைகளை அடிப்படையாகக் கொண்டது எனவும் அவர் தெளிவுபடுத்தினார்.

எவ்வாறு இருப்பினும்,  விமர்சனங்களை எதிர் கொள்ளவும் நிர்வாகத்தில் உள்ள பலவீனங்களை சரிசெய்யவும் தாம் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

நாங்கள் எப்போதும் மக்களை நம்ப வைக்க முயற்சிக்கிறோம். பொதுமக்கள் எந்தவொரு கருத்துகளையும் ஆலோசனைகளையும் வழங்க எங்கள் கதவு எப்போதும் திறந்திருக்கும் என்று அவர் கூறினார்.


Pengarang :