ECONOMYSELANGOR

சிலாங்கூர் சட்டமன்றத்தைக் கலைப்பதில்லை என்ற முடிவு சரியானது- கம்போங் துங்கு உறுப்பினர் கருத்து

பெட்டாலிங் ஜெயா, அக் 13– நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை பின்பற்றி மாநில   சட்டமன்றத்தைக் கலைப்பதில்லை என்ற சிலாங்கூர் அரசின் முடிவு மக்களின் நலன் காக்கும் சரியான நடவடிக்கையாகும் என்று கம்போங் துங்கு சட்டமன்ற உறுப்பினர் லிம் யி வெய் கூறினார்.

இந்த முடிவு சவாலானதாக இருந்தாலும் வடகிழக்கு பருவமழை மற்றும் கடல் பெருக்கை எதிர்கொள்ள தயார் நிலையில் இருப்பது அவசியம் என்று அவர் குறிப்பிட்டார்.

மாநில அரசு மக்கள் நலனை மனதில் கொள்ள வேண்டும். மேலும் வெள்ளம் பாதித்த பகுதிகளில் வசிப்பவர்களை வாக்களிக்குமாறு கட்டாயப்படுத்துவது நியாயமற்றது என்றார் அவர்.

இருப்பினும், மாநில சட்டமன்றம் கலைக்கப்படாத பட்சத்தில் தக்க தருணம் வரும்போது சிலாங்கூர், பினாங்கு மற்றும் நெகிரி செம்பிலான் ஆகியவை ஒன்றாகக் கலைக்கப்படும் என்று நான் நம்புகிறேன் என்று அவர் சொன்னார்.

சிலாங்கூர் ரக்பி யூனியன் 2022 மகளிர் ரக்பி சாம்பியன்ஷிப் (கம்போங் துங்கு தொகுதி கிண்ணம்) போட்டியின் போது செய்தியாளர் கூட்டத்தில் இதனைக் கூறினார்.


Pengarang :