ஷா ஆலம், அக் 17- வர்த்தகத்தில் ஈடுபட விரும்பும் தொழில்முனைவோர் யாயாசான் ஹிஜ்ரா அறவாரியத்தின் ஜீரோ டு ஹீரோ திட்டத்தில் பங்கேற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
தொழில்முனைவோர் பயிற்சி, சந்தை வாய்ப்பு மற்றும் பயிற்சிகளை கடனைத் திரும்பச் செலுத்தி முடிக்கும் காலம் வரை வழங்குவதற்கு பல்வேறு துறைகளைச் சேர்ந்த எட்டு முன்னணி நிறுவனங்கள் மற்றும் வியூக பங்காளிகளை ஹிஜ்ரா ஏற்பாடு செய்துள்ளது.
ஜீரோ டு ஹீரோ திட்டத்தின் வாயிலாக ஹிஜ்ராவின் எட்டு முன்னணி நிறுவனங்கள் மற்றும் வியூக பங்காளிகளுடன் பயிற்சித் திட்டத்தில் ஈடுபடுவதற்கு எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள் என்று அந்த அறவாரியம் தனது பேஸ்புக் பதிவில் கூறியது.
இந்த வர்த்தகப் பயிற்சித் திட்டம் தொடர்பில் மேல் விபரங்கள் பெற விரும்புவோர் www.hijrahselangor.com என்ற அகப்பக்கம் வாயிலாக தொடர்பு கொள்ளும்படியும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.