ECONOMYSELANGOR

மறுசுழற்சி செய்யப்படும் பொருட்களுக்கு பரிமாற்றமாக ஷாப்பிங் பற்றுச் சீட்டுகளைப் பெற வாய்ப்பு – எம்பிஎஸ்ஏ

ஷா ஆலம், 18 அக்: இந்தச் சனிக்கிழமை அன்று இங்குள்ள அல்-முஹ்சினின் மசூதி, கம்போங் சுங்கை கண்டிஸ் செக்சன் 36 இல், மறுசுழற்சி செய்யும் பொருட்களுக்கு பரிமாற்றாக 99 ஸ்பீட் மார்ட் பல்பொருள் அங்காடி பற்றுச் சீட்டுகளை பெறும் வாய்ப்பை எம்பிஎஸ்ஏ ஏற்படுத்தித் தருகிறது.

சுற்றுச்சூழல் பாதுகாக்கும் திட்டமான ‘மறுசுழற்சி பரிமாற்றம்’ காலை 9 மணிக்கு தொடங்கும் என்று ஷா ஆலம் நகரக் கவுன்சில் (எம்பிஎஸ்ஏ) பேஸ்புக் மூலம் அறிவித்தது.

“மறுசுழற்சி செய்யக்கூடிய பொருள் எடைக்கு ஏற்ப, உதாரணமாக பாலிஎதிலீன் டெரெப்தாலேட் (PET) 2kg (RM5) பயன்படுத்திய சமையல் எண்ணெய் 5 கிலோ (RM10), கலப்பு காகிதம் அல்லது புத்தகங்கள் 10kg (RM5), அலுமினியம் கேன் 1kg (RM5), பால் டின் அல்லது இரும்பு கேன் 5kg (RM5) என மதிப்பீடுக்கு ஏற்ப பற்றுச்சீட்டின் மதிப்பு அமையும் என்றார்.

மேலும், மின் கழிவு பொருட்களை பெற்றுக் கொள்ளும் மறுசுழற்சி சேகரிப்பு திட்டமும், நடத்தப்படும்.

“பொருட்கள் சேதமடைந்திருந்தாலும் இன்னும் பயன்படுத்தக்கூடிய நிலையில் உள்ளவைக்கு பணமாக வழங்கப்படும்,” என்று அவர் கூறினார்.


Pengarang :