ECONOMYSELANGOR

அக்டோபர் வரையிலான மாநில வருவாய் RM 210.2 கோடியாக பதிவு

ஷா ஆலம், அக் 18: சிலாங்கூர் நேற்றைய நிலவரப்படி RM 210.2 கோடியைப் பதிவு செய்து, இந்த ஆண்டு நிர்ணயித்த இலக்கான RM205 கோடியைத் தாண்டியுள்ளது.

அனைத்து மாநிலத் தலைவர்களின் கூட்டுப் பணியின் பலனாக மூன்று வருடங்கள் தொடர்ச்சியாக இலக்கை தாண்டி சாதனை படைத்தது என்று டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

“நேற்றைய (அக்டோபர் 17) நிலவரப்படி, சிலாங்கூர் 2022 இல் RM205 கோடி வருவாய் இலக்கை தாண்டி, RM 210.2 கோடி வருமானத்தை பதிவு செய்துள்ளது.

“மாநிலத்தின் வருமானம் இலக்கை தாண்டியது தொடர்ந்து மூன்றாவது ஆண்டாகும். இந்த சாதனையானது ஒருங்கிணைந்த குழுப்பணி மற்றும் விவேகமான பொருளாதார நிர்வாகத்தின் விளைவாகும்,” என்று அவர் இன்று பேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, 2017ல் 23.2 விழுக்காடாக இருந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 2021ல் 24.8 விழுக்காடாக அதிகரித்ததன் மூலம் 2018க்குப் பிறகு மாநிலத்தின் பொருளாதார செயல்திறன் சிறப்பாக இருக்கிறது என்று அமிருடின் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு 5.0 விழுக்காடு வளர்ச்சியை பதிவு செய்தது, ஆனால் அதற்கு முந்தைய ஆண்டில் 5.2 விழுக்காடு வீழ்ச்சியுடன் ஒப்பிடும் பொழுது சிலாங்கூரின் பொருளாதாரம்  சிறப்பாக மீட்சி கண்டுள்ளது தெளிவாகிறது.


Pengarang :