Orang awam mematuhi tatacara operasi piawai (SOP) dengan memakai pelitup muka semasa berada di tempat awam ketika tinjauan di sekitar Bandar Klang pada 15 Oktober 2020. Foto BERNAMA
ANTARABANGSAECONOMYMEDIA STATEMENTNATIONAL

தீபாவளியை முன்னிட்டு கிள்ளான் லிட்டில் இந்தியாவில் இன்று முதல் சாலைகள் கட்டங் கட்டமாக மூடப்படும்

கோலாலம்பூர், அக் 19 – கிள்ளான், ஜாலான் தெங்கு கிளானா மற்றும் அதனைச் சுற்றியுள்ள நான்கு சாலைகள்  இன்று தொடங்கி வரும் திங்கள் வரை கட்டங் கட்டமாக போக்குவரத்துக்கு மூடப்படும்.

அடுத்த வாரம் கொண்டாடப்படவிருக்கும் தீபாவளியை முன்னிட்டு பொது மக்கள் அந்த வணிக வளாகத்தில் பொருட்களை வாங்குவதை எளிதாக்கும் வகையில் அச்சாலை மூடுவதாக தென் கிள்ளான் மாவட்ட போக்குவரத்து காவல்துறை அறிவித்தது.

அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்ப்பதற்கு ஏதுவாக தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிடும்படி பொது மக்களை அத்துறை தனது பேஸ்புக் பதிவின் வாயிலாக கேட்டுக் கொண்டது.

போக்குவரத்துக்கு சாலைகள் மூடப்படும் நாள் மற்றும் நேரம் வருமாறு-

அக்டோபர் 19 – புதன்கிழமை

(மாலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை)

  1. ஜாலான் தெங்கு கிளானா/ ஜாலான் மொஹெட் (ஓருவழிச் சாலை)

20 அக்டோபர் – வியாழன்

(பின்னிரவு 12.01 முதல் நள்ளிரவு 12 வரை)

  1. ஜாலான் தெங்கு கிளானா/ஜாலான் மொஹெட் (ஓருவழிச் சாலை)

21 அக்டோபர் – வெள்ளிக்கிழமை

(மாலை 3 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை)

  1. ஜாலான் தெங்கு கிளானா/ஜாலான் மொஹெட் (ஒரு வழிச் சாலை)
  2. டத்தோ ஹம்சா சாலை / ஜாலான் இஸ்தானா சந்திப்பு  (ஷாரில் கிளினிக்)
  3. லோரோங் திங்காட் (மேக்னம் முன்புறம்)
  4. ஜாலான் பெகாவாய்/ஜாலான் இஸ்தானா சாலை சந்திப்பு

22 அக்டோபர் – சனிக்கிழமை

(பின்னிரவு 12.01 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை)

  1. ஜாலான் தெங்கு/ ஜாலான் மொஹெட் (ஓருவழிச்சாலை)
  2. டத்தோ ஹம்சா சாலை / இஸ்தானா சாலை சந்திப்பு (ஷாரில் கிளினிக்)
  3. லோரோங் திங்காட் (மேக்னம் முன்புறம்)
  4. ஜாலான் பெகாவாய் / ஜாலான் இஸ்தானா சந்திப்பு

23 அக்டோபர் – ஞாயிறு

(பின்னிரவு 12.01 முதல் நள்ளிரவு 12 வரை)

  1. ஜாலான் தெங்கு கிளானா / ஜாலான் மொஹெட் (ஒருவழிச் சாலை)
  2. டத்தோ ஹம்சா சாலை / இஸ்தானா சாலை சந்திப்பு (ஷரில் கிளினிக்)
  3. லோரோங் திங்காட் (மேக்னம் முன்புறம்)
  4. ஜாலான் பெகாவாய் / ஜாலான் இஸ்தானா சாலை சந்திப்பு 

24 அக்டோபர் – திங்கட்கிழமை

( பின்னிரவு 12.01 மணி முதல் அதிகாலை காலை 6 மணி வரை)

  1. ஜாலான் தெங்கு கிளானா / ஜாலான் மெஹாட் (ஒரு வழிச்சாலை)
  2. ஜாலான் டத்தோ ஹம்சா / ஜாலான் இஸ்தானா (ஷரில் கிளினிக்)
  3. லோரோங் திங்காட் (மேக்னம் முன்புறம்)
  4.  ஜாலான் பெகாவாய் / ஜாலான் இஸ்தானா

Pengarang :