ACTIVITIES AND ADSMEDIA STATEMENTNATIONAL

மீனவப் படகிலிருந்து தவறி விழுந்த ஊழியரைத் தேடும் பணியில் ஏ.பி.எம்.எம். தீவிரம்

ஷா ஆலம், அக் 19- சிகிஞ்சான் கடல் பகுதியில் கடந்த திங்கட்கிழமை மீனவப் படகிலிருந்து தவறி விழுந்த பணியாளரை தேடும் பணியில் மலேசிய கடல்சார் அமலாக்க நிறுவனத்தின் சிலாங்கூர் மாநிலப் பிரிவு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

சிகிஞ்சான் கடலோரத்தை உள்ளடக்கிய 53.46 கடல் மைல் பகுதியில் தேடி மீட்கும் நடவடிக்கை இரண்டாவது நாளாக இன்று காலை 7.00 முதல் ஜோகூர் பாரு கடல் மீட்பு துறை யைமத்தின் ஒருங்கிணைப்புடன் மேற்கொள்ளப்படுவதாக சிலாங்கூர் மாநில ஏ.பி.எம்.எம். இயக்குநர் வீ. சிவக்குமார் கூறினார்.

மீட்பு படகுகளுடன் தேடுதல் நடவடிக்கை நேற்று காலை 1.05 மணியளவில் தீவிரப்படுத்தப் பட்டதாக கூறிய அவர், பாகான் சிகிஞ்சான் படகுத் துறையில் முன்னிணி தேடி மீட்கும் தளம் அமைக்கப்பட்டதாகச் சொன்னார்.

நாற்பது வயதான எஃப்பாண்டி என்ற அந்த இந்தோனேசிய ஆடவர் கடந்த 17ஆம் தேதி இரவு 7.30 மணியளவில் படகிலிருந்து தவறி விழுந்ததாக புகார் செய்யப்பட்டுள்ளது. கடலில் விழுந்த போது அவர் பாதுகாப்பு அங்கியை அணிந்திருக்கவில்லை எனக் கூறப்படுகிறது.


Pengarang :