ECONOMYNATIONALSELANGOR

துரோகிகளை களையெடுக்க கட்சித் தாவல் தடைச் சட்டம் ஹராப்பானுக்கு உதவும்

மெந்தகாப், அக் 20– போராட்டத்திற்கான அடிப்படை நோக்கத்திலிருந்து விலகியோடும் உறுப்பினர்களை களையெடுக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட கட்சித் தாவல் தடைச் சட்ட மசோதா உதவும் என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

பக்கத்தான் ஹராப்பான் முன்னெடுத்த இந்த சட்டத் திருத்த மசோதா ஷெரட்டோன் நகர்வு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று சிலாங்கூர் மாநில ஹராப்பான் தலைவருமான அவர் சொன்னார்.

ஷெரட்டோன் நகர்வு தொடங்கியது முதல் நாடு அமைதியாக இல்லை. பிரதமர்கள் மாறினர். அமைச்சர்களும் தொடர்ந்து மாற்றம் செய்யப்பட்டனர். கொள்கைகளிலும் குழப்ப நிலை ஏற்பட்டது என்று அவர் தெரிவித்தார்.

இந்த துரோகத்திலும் நன்மை உள்ளது. சுத்தப்படுத்தவும் துரோகிகளை களையெடுக்கவும் வாய்ப்பு கிட்டியுள்ளது. அரசியல்  தவளைகளை களையெடுப்பதற்கும் மலேசிய அரசியலிலிருந்து முற்றாக ஒழிப்பதற்கும் இது அரிய சந்தர்ப்பமாக விளங்குகிறது என்றார் அவர்.

மெந்தகாப் நகரில் நேற்று நடைபெற்ற பகாங் மாநில நிலையிலான பக்கத்தான் ஹராப்பான் கூட்டணியின் தேர்தல் பிரசாரத்தில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.


Pengarang :