ECONOMYSELANGOR

எம்.பி.கே.எஸ். ஆய்வரங்கு அடுக்குமாடி குடியிருப்பு பிரச்னைகளைத் தீர்க்கும் தளமாக விளங்கும் 

கோலாலம்பூர், அக் 20– கோல சிலாங்கூர் நகராண்மைக் கழக (எம்.பி.கே.எஸ்.) ஏற்பாட்டிலான முதல் நிலை அடுக்குமாடி குடியிருப்பு நிர்வாகம் மீதான ஆய்வரங்கு அக்குடியிருப்புகளின் நிலவும் பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் தளமாக விளங்கும்.

நகர்ப்புறங்களில் மட்டுமின்றி புறநகர்ப்புறங்களிலும் அடுக்குமாடி குடியிருப்புகள் துரித வளர்ச்சி கண்டு வருவதால் அக்குடியிருப்புகளின் நிர்வாகம் மிகவும் அவசியமாக தேவைப்படுவதாக ஊராட்சி மன்றங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.

அடுக்குமாடி குடியிருப்புகள் அதிகமாக நிர்மாணிக்கப்படும் பட்சத்தில் அக்குடியிருப்புகள் தொடர்பான விரிவான விளக்கங்களும் தரப்படுவது அவசியம் என்று அவர் தெரிவித்தார்.

அடுக்குமாடி குடியிருப்பு நிர்வாகத்தில் சம்பந்தப்பட்டுள்ள அனைத்து தரப்பினருக்கும் தெளிவான விளக்கமும் அனுபவமும் கிடைப்பதை உறுதி செய்ய இத்தகைய ஆய்வரங்குகள் பெரிதும் துணை புரியும் என்று தாம் நம்புவதாக அவர் சொன்னார்.

இங்குள்ள பார்க் ராயல் கலெக்சனில் இந்த ஆய்வரங்கை தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

இவ்விவகாரம் தொடர்பில் அனைத்து தரப்பினரும் தெளிவான விளக்கத்தைப் பெறுவதற்கு ஏதுவாக இத்தகைய கருத்தரங்கை அனைத்து ஊராட்சி மன்றங்களும் நடத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.


Pengarang :