ECONOMYSELANGOR

பழுதடைந்த சாலைகள் சீரமைக்கும் முயற்சியை இரட்டிப்பாக்கியது மாநில அரசு

ஷா ஆலம், அக் 21– சாலைகளைப் பராமரிப்பதில் மாநில அரசு எப்போதும் தீவிர கவனம் செலுத்தி வருவது வழக்கம். தற்போது அந்த முயற்சியை அது இரட்டிப்பாக்கியுள்ளது. பொதுப்பணி இலாகாவின் கண்காணிப்பின் கீழுள்ள 4,000 கிலோமீட்டர் சாலைகளில் காணப்பட்ட 16,288 பழுதுகள் கடந்தாண்டில் சரி செய்யப்பட்டன.

இவ்வாண்டில் பொதுமக்களிடமிருந்து கிடைத்த புகாரின் பேரில் இவ்வாண்டில் (ஜூன் மாதம் வரை) 11,153 பழுதுகள் சீரமைக்கப்பட்டதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

டிவிட்டர் வழி செய்யப்படும் இந்த புகார்களுக்கு மீது 24 மணி நேரத்தில் தீர்வு காண்பதில் மாநில அரசின் நிறுவனமான இன்ப்ராசெல் தீவிரம் காட்டி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

அதே சமயம், அட்டவணையிடப்பட்ட பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்பு பணிகளையும் அந்நிறுவனம் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது என்று அவர் சொன்னார்.

கடந்த செப்டம்பர் மாதம் சமூக ஊடகங்கள் வாயிலாக பெறப்பட்ட புகார்களைத் தொடர்ந்து மாநிலத்திலுள்ள பல்வேறு சாலைகள் 24 மணி நேரத்தில் சீரமைக்கப்பட்டன என்றார் அவர்.


Pengarang :