ECONOMYNATIONAL

நஜிப் உள்ளிட்ட சிறைக் கைதிகள் 15வது பொதுத் தேர்தலில் அறிக்கைகளை வெளியிட அனுமதிக்கப்படவில்லை

மலாக்கா, அக்.21 – 15வது பொதுத் தேர்தலில் பிரச்சாரம் செய்வதற்கும் சிறைக் கைதிகள் எந்த அறிக்கையும் வெளியிட அனுமதிக்கப்படவில்லை என்று சிறைத் துறையின் மூத்த இயக்குநர் (சிறைக் கொள்கை) சுப்ரி ஹாஷிம் தெரிவித்தார்.

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக் உட்பட அனைத்து கைதிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்றார்.

மாநில மகளிர் விவகாரம், குடும்ப மேம்பாடு மற்றும் நலன்புரி குழுவின் தலைவர் டத்தோ கல்சோம் நோர்டின், ‘மெஞ்சங்காவ் அபாட் டிண்டிங் பென்ஜாரா’ என்ற கண்காட்சியைத் திறந்து வைத்த பிறகு, செய்தியாளர்களை சந்தித்தபோது, “சிறை கைதிகளால் எந்த அறிக்கையும் வெளியிட முடியாது,” என்று சுப்ரி கூறினார்.

சிறைக் கைதிகளிடமிருந்து அவர்களது குடும்பத்தினருக்கு அனுப்பப்படும் கடிதங்கள் அல்லது ஆவணங்கள் கூட, அவர்கள் வெளியே அனுப்பப்படுவதற்கு முன், திணைக்களத்தால் முதலில்  ;சோதனை செய்யப்படும் என்றார்.

“சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு அரசியலுடன் எந்த தொடர்பும் இல்லை, ஆளும் அரசாங்கத்தை பொருட்படுத்தாமல் நாங்கள் எங்கள் பொறுப்புகளை நிறைவேற்றுகிறோம்,” என்று சுப்ரி மேலும் கூறினார்.


Pengarang :