ECONOMYSELANGOR

கோம்பாக்கை மேம்படுத்த 49 சிறப்பு நீண்டகாலத் திட்டங்கள் – மந்திரி புசார் தகவல்

ரவாங், அக் 21- பண்டார் பத்து ஆராங் சிறப்புப் பகுதி திட்டம் 2030 (ஆர்.கே.கே.) அமலாக்கம் மூலம் கோம்பாக் வட்டாரத்தின் பொருளாதாரத்தை நீண்ட கால அடிப்படையில் வளர்ச்சி காணச் செய்வதற்கான 49 சிறப்புத் திட்டங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

அந்த 49 திட்டங்களில் 11 உயர் தாக்கம் கொண்ட திட்டங்களாகும். மேலும் 21 துணை திட்டங்களாகவும் எஞ்சியவை கூடியவிரைவில் தொடங்கப்படவுள்ள குறுகியா காலத் திட்டங்களாகவும் உள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

அப்பகுதியிலுள்ள ஒவ்வொரு அங்குல இடத்தின் மீதும் மாநில அரசு முழு அக்கறை கொண்டுள்ளதை இந்நடவடிக்கை காட்டுகிறது. மாநிலத்தின் முன்னேற்றமும் வளர்ச்சியும் நகர்ப்புறங்களை மட்டும் சார்ந்திருக்கக்கூடாது என்பது எங்களின் நிலைப்பாடாகும் என்று அவர் தெரிவித்தார்.

இன்று இங்கு ஆர்.கே.கே. திட்ட நகலை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மாநில, ஊராட்சி மன்ற மற்றும் சிறப்பு பகுதிகளுக்கான கட்டமைப்பு திட்டதின் அடிப்படையில் நகர மற்றும் கிராம திட்டமிடலை மேலும் ஆக்ககரமானதாக ஆக்க மாநில அரசு உறுதி பூண்டுள்ளது எனவும் அமிருடின் சொன்னார்.

நிகழ்கால மற்றும் எதிர்கால சந்ததியினர் நல்லிணக்கத்தோடு சுபிட்சமாக வாழ்வதற்குரிய சுற்றுச்சூழலை உருவாக்க மேம்பாட்டுத் திட்டங்கள் யாவும் உயர்நெறி, திறன் மற்றும் வெளிப்படைப் போக்கை கொண்டவையாக இருப்பது அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.


Pengarang :